惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
博客园_首页
博客园 - 【当耐特】
量子位
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
The Cloudflare Blog
小众软件
小众软件
J
Java Code Geeks
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
H
Help Net Security
Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கான் சிட்டி: திரைப் பார்வை - அர்ஜுன் தாஸுக்கு கைகொடுத்ததா...
ஆர்.சி.ஜெயந்தன் · 2026-06-27 · via hindutamil

Updated on: 

பலகீனமாக பொருளாதாரப் பின்புலத்தால் நிராகரிப்பு ஆளாகுதல், பொருளாதார ரீதியாக ஏமாற்றப்படுதல், ஏமாற்றுதல் ஆகிய வாழ்க்கைச் சூழ்நிலைகளைக் கடந்து வரும் கதாபாத்திரங்கள், பெரும் பொருளீட்டலை முறைகேடான வழியில் செய்ய முயன்று வெல்வதை த்ரில்லராக ரசிக்கச் சொல்வது ஒரு விதக் குரூரமான ரசனைதான்.

‘கான் சிட்டி’யில் நாம் சந்திக்கும் சரவணன் (அர்ஜுன் தாஸ்) மித்ரா (அன்னா பென்), அவருடைய மாற்றுத் திறனாளி மகன் ஜீவா (அகிலன்), ஜாக்கி (யோகி பாபு) அவருடைய அம்மா ஜானகி (வடிவுக்கரசி) ஆகியோர் கர்நாடகாவின் மங்களூருவில் ஓர் உணவகத்தை நடத்துகிறார்கள். அகிலனை தினசரி தன்னுடைய காரில் பள்ளியில் போய் விட்டு வருகிறார் சரவணன்.

பள்ளி வளாகத்துக்குள் அவனைச் சக்கர வண்டியில்தான் அனுப்புகிறார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்று நான் நினைக்கும்போது, இல்லை இல்லை... இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பமாகச் சேர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழும் பொருளாதாரக் குற்றவாளிகள் என்பதை அவர்களின் பின்கதையை விரித்துக் காட்டுகிறார் இயக்குநர். ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த அவர்களின் பிளாஷ் பேக்குகள் ஒவ்வொன்றும் மெல்ல ஊர்ந்து நகர்ந்து செல்வதால் முதல் பாதியில் நமக்கு அவர்களின் கதை எந்த அதிர்ச்சியும் ஏற்படுத்தாமல் அயர்ச்சியே மிஞ்சுகிறது.

ஆனால், இடைவேளைத் திருப்பம் வரும்போது, ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான கல்யாண சுந்தரம் (நந்தகோபால்) மூலம் நம்மை அதிர வைக்கிறார் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். இன்ஸ்பெக்டர் கல்யாண சுந்தரம் சிறுவன் ஜீவாவைச் சென்னைக்குக் கடத்திக்கொண்டு போய்விடுகிறார். தலைமறைவாக வாழும் இந்த தத்துக் குடும்பம் இப்போது கொத்தாக சென்னைக்கு ஓடி வந்து கல்யாண சுந்தரத்தின் முன்னால் நின்று சிறுவனை விட்டுவிடும்படிக் கதறுகிறது.

ஜீவாவை கல்யாண சுந்தரம் விட வேண்டுமென்றால், அவருக்காகப் பணம் கொட்டும் ‘ஸ்கேம்’ ஒன்றை மாட்டிக்கொள்ளமுடியாதபடி துல்லியமாகச் செய்து முடிக்க வேண்டும். அதை அந்தத் தத்துக் குடும்பம் செய்துகொடுத்துத் தப்பித்துக் கொண்டதா என்பது மீதிக் கதை.

தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒன்று சேர்ந்தவர்கள், கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகள் ஒளிந்து வாழும்போது போலீஸ் ஏன் இவர்களைத் தேடி வரவில்லை என்பதற்கான காரணம் கல்யாண சுந்தரத்திடம் ஒளிந்திருக்கிறது. அது சுவாரசியமாகவும் இருக்கிறது. அதேபோல் கல்யாண சுந்தரத்துக்காகத் தத்துக் குடும்பம் களமிறங்கிச் செய்யும் ‘டோல் வசூல்’ போர்ஷன்கள் சுவாரசியமாகவும் சற்று நகைச்சுவை கலந்தும் இருப்பதால் ரசிக்க முடிகிறது.

ஆனால், கர்நாடகத்தில் வாழ்ந்த காலத்தில் இந்தக் குடும்பத்துக்குள் உறவு மற்றும் நட்பு ரீதியாக என்ன மாதிரியான உணர்வு முதிர்ச்சிகள் ஏற்பட்டன என்கிற கேள்விக்கு சிறுவன் ஜீவாவின் மீதான பாசத்தையும், பிராடு அம்மா - பிள்ளைக்குள் இருக்கும் பாசத்தையும் மட்டும் இயக்குநர் நம்மிடம் நீட்டுவது திரைக்கதையில் பாரிய சத்துக் குறைவு இருப்பதைக் காட்டுகிறது.

என்றாலும் சிறு வயது முதல் தன்னுடைய தந்தை என நினைத்து வளரும் ஒரு சிறுவனை ஏமாற்றிவிடக் கூடாது என்று எண்ணும் சரவணன் கதாபாத்திரம், இந்த நல்ல குணத்துக்காகவே அவர் செய்த தில்லாங்கடிகளை நாம் மன்னிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் இயக்குநர்.

இதுபோன்ற ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தாண்டி, இறுதியில் தத்துக் குடும்பம் பணத்தைக் கொண்டு கிளைமாக்ஸில் செய்யும் செயல் மிகவும் செயற்கையாக இருந்தாலும் அதன் நோக்கத்துக்காகப் ‘பிளைச்சு போங்கப்பா..’ என்று கான் சிட்டி படக்குழுவைப் பார்த்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இரண்டாம் பாதியே பார்க்கும்படியாக இருப்பதால் அதில் இயக்குநர் ‘பிளேஸ்’ செய்துள்ள திருப்பங்கள் எங்கோ பார்த்ததுபோல் பழைய தன்மையுடன் இருந்தாலும் நகைச்சுவை பூச்சால் அனைத்தும் தப்பித்துக் கடந்து போகின்றன.

வழக்கம்போல் தன்னுடைய குரல் ஜாலத்தாலும் அளவான நடிப்பாலும் தன்னை ‘சரவணன்’ ஆக நம்ப வைத்துவிடுகிறார் அர்ஜுன் தாஸ். மற்ற முதன்மைக் கதாபாத்திரங்களின் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. அர்ஜுன் தாஸ் நடிப்பையும் அவர் ஏற்ற கதாபாத்திர வடிவமைப்பையும் உள்வாங்கியபோது ஏனோ ‘லக்கி பாஸ்கர்’ (2024) நினைவில் வந்து வந்து மோதிக்கொண்டிருந்தார்.

நேர்மையாக உழைத்தும் வங்கியின் பணியடுக்கு அரசியல் காரணமாகப் பதவி உயர்வு மறுக்கப்படும்போது ‘லக்கி பாஸ்கர்’ அடையும் ஏமாற்றமும் அவமானமும் பார்வையாளர்களை அவரோடு மிக எளிதாகத் தொடர்புப்படுத்திக் கொள்ள வைத்தது. அதேபோல், சரவணனுக்கு ஏற்படும் நிராகரிப்பையும் கூறலாம். ஆனால் பாஸ்கர் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல; எப்போதும் ‘பிளான் பி’யை கைவசம் வைத்திருக்கும் புத்திசாலி சாமானியன்.

ஆனால், சரவணன் ஓடி ஒளிந்து திரும்பி வருபவன். வளர்ப்பு மகன் மீது கொண்ட பாசத்துக்காகச் சாத்தியமில்லாத சாகசங்களில் ஈடுபடுபவன். இந்த ‘சத்தியமில்லாத’ என்கிற உணர்வு வராதபடி திரைக்கதையில் அதிக கவனத்துடன் உழைத்திருந்தால் ‘கான் சிட்டி’ இன்னும் கவர்ந்திருக்கும். என்றாலும் படத்தின் நல்ல மேக்கிங் ஒன்றுக்காக வேணும் இதனைக் காணலாம்.