惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
L
LangChain Blog
B
Blog
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
U
Unit 42
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
小众软件
小众软件
I
InfoQ
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதில் சுவராய் நின்ற 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா: ஸ்பெயின...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

அமெரிக்காவின் ஜியார்ஜியா, அட்லாண்டா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை ஹெச் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியை 50 லட்சம் மக்கள் தொகையே கொண்ட உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற 3-வது சிறிய ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே கால்பந்து அணி 0-0 என்று டிராவுக்குப் பணித்தது.

இதன் மூலம் அறிமுக உலகக் கோப்பை போட்டியிலேயே புள்ளிகள் பெற்று சாதனை படைத்தது கேப் வெர்டே. இதற்கு பிரதான காரணம் கேப் வெர்டே அணியின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா தான் என்றால் மிகையாகாது. அவர்தான் நேற்று ஹீரோ. ஸ்பெயின் அணியின் 27 கோல் முயற்சியில் இலக்கை நோக்கிய ஷாட்கள் ஒன்று கூட கோலுக்குள் செல்ல முடியாமல் மதில் சுவாராய் நின்று காத்தார் வோசின்ஹா. ஆட்டத்தின் இறுதி விசில் அடிக்கப்பட்டவுடன் சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் 0-0 என்று டிரா என்ற ஸ்கோரைப் பார்த்து வோசின்ஹா உணர்ச்சி வயப்பட்டு கண்ணீர் விட்டார்.

ஸ்பெயின் அணிக்கு மேலும் அவமானமாகி இருக்க வேண்டிய விஷயமும் நடந்தது. அதாவது போட்டியைத் தோற்றிருக்கும். ஆட்டம் முடிவுத் தருணத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் கேப் வெர்டே வீரர் டைனி போர்கேஸ் அடித்த கோல் நோக்கிய ஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சிமோன் தடுத்தார். இல்லையெனில் ஸ்பெயின் தோற்றே போயிருக்கும். உலகக் கோப்பையின் ஆகப்பெரிய ஷாக் ஆக அது மாறியிருக்கும்.

வெள்ளை நிற ஜெர்சியில் களமிறங்கிய கேப் வெர்டே வீரர்கள், தங்கள் கோல் பகுதியைச் சுற்றி உறுதியான பாதுகாப்பு அரணை அமைத்து ஸ்பெயினின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடித்தனர். போட்டி முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோசின்ஹா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே, லமின் யாமல் மற்றும் நிகோ வில்லியம்ஸுக்கு தொடக்க அணியில் ஓய்வு அளித்தது தாக்குதல் வேகத்தை பாதித்தது. அவர்களுக்கு பதிலாக களமிறங்கிய பெர்ரான் டோரஸ் மற்றும் கேவியின் ஆட்டம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் மார்க் குக்குரெல்லாவின் தொலைதூர ஷாட் கோலுக்கு சற்றே வெளியே சென்றது. பின்னர் மிகேல் ஒயர்சாபல் ஒரு சிறந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறினார்.

அதன்பிறகு வோசின்ஹா தனது அசத்தலான தடுப்புகளால் ஸ்பெயினுக்கு போக்கு காட்டினார். 36-வது நிமிடத்தில் பெட்ரியின் ஷாட்டை தடுத்த அவர், மூன்று நிமிடங்கள் கழித்து பெர்ரான் டோரஸின் ஷாட் கம்பத்தில் பட்டு திரும்பியபோது, ஒயர்சாபலின் ஹெட்டரையும் ஒரே கையால் அபாரமாக தடுத்தார்.

முதல் பாதியின் இறுதியில் லபோர்ட்டின் ஹெட்டரையும் வோசின்ஹா சிறப்பாக தடுத்து கேப் வெர்டே அணியை காப்பாற்றினார்.

இரண்டாம் பாதியிலும் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஒயர்சாபல் நெருக்கமான வாய்ப்பை தவறவிட்டார்; ஃபேபியன் ரூயிஸின் இரண்டு முயற்சிகளும் இலக்கை அடையவில்லை.

70-வது நிமிடத்தில் களமிறங்கிய இளம் நட்சத்திரம் லமின் யாமல், ஸ்பெயின் தாக்குதலுக்கு புதிய வேகத்தை அளித்தார். அவரது வேகமான முன்னேற்றங்கள் கேப் வெர்டே தற்காப்புக்கு சவாலை ஏற்படுத்தின.

88-வது நிமிடத்தில் யாமல் கொடுத்த துல்லியமான பாஸை ஒயர்சாபல் கோலாக மாற்ற முயன்றார். ஆனால், கேப் வெர்டே வீரர்கள் கடைசி நொடியில் அதைத் தடுத்து நிறுத்தினர்.

கூடுதல் நேரத்தில் கேப் வெர்டே தனது ஒரே இலக்கை நோக்கிய முயற்சியைச் செய்தது. மேலும், இறுதி நிமிடங்களில் எதிர்தாக்குதல்களிலும் ஆபத்தை உருவாக்கியது. ஆனால், ஸ்பெயின் கோல் கீப்பரும் தயாராகவே இருந்தார். கோல் விழவில்லை.

இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் தனது முதல் போட்டியிலேயே கேப் வெர்டே, வலிமைமிக்க ஸ்பெயினை கோல் இன்றி தடுத்து கால்பந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு அறிமுக அணியின் சாதனைப் போட்டியாகவும் அமைந்தது.