惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
C
Check Point Blog
J
Java Code Geeks
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
量子位
Google DeepMind News
Google DeepMind News
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
aimingoo的专栏
aimingoo的专栏
N
Netflix TechBlog - Medium
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
The Blog of Author Tim Ferriss
小众软件
小众软件
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரூ.100 கோடி போதைப் பொருட்களுடன் 22 புத்த துறவிகள் கைது
2026-04-27 · via hindutamil

தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதால் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகள்.

Updated on

1 min read

ராமேசுவரம்: தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 110 கிலோ போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த 22 புத்ததுறவிகள் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தாய்லாந்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பிய 22 புத்த துறவிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அவர்கள் கொண்டு வந்த பைகளில் பள்ளி உபகரணங்கள், பல்வேறு இனிப்புகளுடன் 110 கிலோ போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு துறவியின் பையில் இருந்தும் தலா 5 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

இதையடுத்து, 22 புத்த துறவிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புத்தமடாலயங்களில் தங்கியிருந்த படி உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த அளவுக்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது மற்றும் கடத்தலில் புத்த துறவிகள் குழு ஈடுபட்டது இதுவே முதல் முறை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 22 புத்த துறவிகளையும் இலங்கை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

துறவிகள் அமைப்பு கண்டனம்: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இலங்கையின் மகாநாயக்க துறவிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: புத்த துறவிக்கான உடையை அணிந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்ட விரோதமானது.

அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அவர்களை புத்த பீடங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி, இளம் துறவிகளை இதுபோல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்துவோர் மீதும், அவ்வாறு தூண்டுவோர் மீதும், இதில் தொடர்பு உடைய அனைத்து தரப்பினர் மீதும் விரைவான, விரிவான விசாரணையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.புத்த துறவிகளின் உடைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.