惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
爱范儿
爱范儿
罗磊的独立博客
V
V2EX
量子位
Last Week in AI
Last Week in AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
小众软件
小众软件
博客园 - 【当耐特】
Y
Y Combinator Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
有赞技术团队
有赞技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
Recent Announcements
Recent Announcements
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் வழங...
கி.மகாராஜன் · 2026-06-27 · via hindutamil

Updated on: 

மதுரை: வேறு மதத்​தில் இருந்து முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வருக்கு பிற்​படுத்​தப்​பட்ட முஸ்​லிம் என சாதிச் சான்​றிதழ் வழங்​கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி தெற்கு இலந்​தைகுளத்​தைச் சேர்ந்த பரமசிவம் என்​பவர் கடந்த 2015-ல் முஸ்​லிம் மதத்​துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்​றிக் கொண்​டார். அதன்​பின்​னர், பிற்​படுத்​தப்​பட்​டோர் முஸ்​லிம் பிரி​வில் ‘முஸ்​லிம் லெப்​பை’ என சான்​றிதழ் கேட்டு விண்​ணப்​பித்​தார். அவரது மனு நிராகரிக்​கப்​பட்ட நிலை​யில், முஸ்​லிம் லெப்பை என சான்றிதழ் வழங்க உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். மனுவை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், பி.பி.​பாலாஜி அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வு: தமிழக அரசு 2024 மார்ச் 9-ம் தேதி பிறப்​பித்த அரசாணை அடிப்​படை​யில், மனு​தா​ரர் தனக்கு பிற்​படுத்​தப்​பட்​டோர் முஸ்​லிம் சான்​றிதழ் கோரி மனு அளித்​துள்​ளார்.

அரசாணை​யில், ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், சீர்​மரபினர் அல்​லது பட்​டியல் சாதி பிரிவு​களைச் சேர்ந்​தவர்​கள் முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த 7 பிரிவு​களில் ஏதேனும் ஒன்​றுக்கு மாறும்​போது அவர்​களுக்கு ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்பு முஸ்​லிம்​கள்’ என சான்​றிதழ் வழங்​கலாம்’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

மதம், இனம், சாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்​படை​யில் பாகு​பாடு காட்​டு​வதை இந்திய அரசி​யலமைப்​புச் சட்​டம் தடை செய்​கிறது. அதே​நேரம், சமூக மற்​றும் கல்வி ரீதி​யாக பின்​தங்​கிய குடிமக்​கள் அல்​லது பட்​டியல் சாதி​யினர் அல்​லது பட்​டியல் பழங்​குடி​யினரின் முன்​னேற்​றத்​துக்​காக சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த இடஒதுக்​கீடு விஷ​யத்​தில் தமிழக அரசு கவன​மாக செயல்​பட்​டுள்​ளது. முஸ்​லிம் மதத்​தைப் பின்​பற்​றும் அனை​வரை​யும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் பிரி​வில் சேர்க்​காமல், குறிப்​பிட்ட சில பிரிவு​களை மட்​டுமே பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் பிரி​வில் சேர்த்​துள்​ளது. அரசாணை​யில், ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், சீர்​மரபினர் அல்​லது பட்​டியல் சாதி​யினர் பிரி​வில் இருந்து முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்​கீட்​டுச் சலுகை​யைப் பெற ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் (முஸ்​லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்​ளிட்ட 7 பிரிவு​களில் ஒன்​றைச் சேர்ந்​தவர் என்​ப​தற்​கான சாதிச் சான்​றிதழ் வழங்​கலாம்’ என்​றும் கூறப்​பட்​டுள்​ளது. இது சட்​டப்​படி செல்​லுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

‘இந்து மதம்​போல அல்​லாமல் தங்​களது மதங்​கள் சமூக சமத்​து​வத்தை அளிப்​ப​தாக கிறிஸ்தவ மிஷனரி​களும், முஸ்​லிம் பிரச்​சா​ரகர்​களும் கூறி வரு​கின்​றனர். மதமாற்​றத்தை ஊக்​குவிக்​கும் இத்​தகைய நிலைப்​பாடு இருக்​கும்​போது, முஸ்​லிம் மதத்​தி​லும் படிநிலை அமைப்பு உள்​ளது என்​பது நேர்​மையற்​றது. முஸ்​லிம் மதத்​தில் சில பிரிவு​களை ‘பிற்​படுத்​தப்​பட்​ட​வை’ என்​றும், மற்​றவற்றை ‘முன்​னேறிய​வை’ என்​றும் வகைப்​படுத்​து​வது குர்​ஆனின் கட்​டளை​களுக்கு முரணானது. இஸ்​லாம் ஒரு சமத்​துவ சமு​தா​யத்தை உரு​வாக்​கவே விழைகிறது. இறைவனின் பார்​வை​யில் அனை​வரும் சமம். அங்கு சமூகப் படிநிலைகள் ஏதும் இல்​லை.

இருப்​பினும், வரலாற்று ரீதி​யான காரணங்​களால், முஸ்​லிம் சமூக​மும் பல்​வேறு பிரிவு​களாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இது இந்து மதத்​தில் உள்ள சாதி அமைப்​புக்கு இணை​யானவை என்​றுகூட துணிந்து கூறலாம். சாதி எவ்​வாறு பிறப்​பால் தீர்​மானிக்​கப்​படு​கிறதோ, அதே​போல ஒரு​வர் பிறப்​பாலேயே லெப்​பை, ராவுத்​தர், மரைக்​காயர் அல்​லது தக்​காணி முஸ்​லி​மாக அறியப்​படு​கிறார்.

சென்னை உயர் நீதி​மன்​றம் 75 ஆண்​டு​களுக்கு முன்பு பிறப்​பித்த உத்​தர​வில், ‘முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வுடன் ஒரு​வர் முஸ்​லிம் ஆகிறார்’ என்று கூறப்​பட்​டுள்​ளது. அவரை ஒரு குறிப்​பிட்ட பிரிவுக்​குள் அடக்க முடி​யாது. இந்த உத்​தரவு அமலில் இருக்​கும்​போது, வெறும் அரசாணையால் நீதி​மன்ற உத்​தரவை மாற்​றியமைக்க முடி​யாது. சட்​டம் நிறைவேற்ற சட்டப்​பேர​வைக்கு அதிகாரம், தகுதி இருந்​தா​லும் அரசு நிர்​வாகத்துக்கு அத்​தகைய உரிமை இல்​லை. அரசு நிர்வாகம் ஒரு போதும் நீதி​மன்​றத்​தின் இறு​தித் தீர்ப்​புக்கு எதி​ராக செயல்பட முடி​யாது. அரசுக்கு எதி​ரான முடி​வாக இருப்​ப​தாக கூறி அதை மீறு​வதற்கு நினைத்​தால், அது சட்ட ஆட்​சி​யின் முடிவுக்கு வழி​வகுக்​கும்.

முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வர்​கள் ஏதேனும் ஒரு வகையான இடஒதுக்​கீட்​டுப் பலனை தொடர்ந்து பெறு​வதை உறுதி செய்​ய மட்​டுமே மாநில அரசு இத்​தகைய அணுகு​முறையை மேற்​கொண்​டுள்​ளது. எனவே, தமிழக பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 மார்ச் 9-ம் தேதிபிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.