惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
U
Unit 42
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
IT之家
IT之家
G
Google Developers Blog
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
小众软件
小众软件
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
’தி கேரளா ஸ்டோரி 2’ சர்ச்சை: தலைப்​பில் இருந்து ‘கேரளா’வை...
நிலா · 2026-06-21 · via hindutamil

Updated on: 

உல்கா குப்​தா, அதிதி பாடி​யா, ஐஸ்​வர்யா ஓஜா முதன்மை வேடங்களில் நடித்​துள்ள படம், ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. கமக்யா நாராயண் சிங் இயக்​கிய இப்​படத்தை விபுல் ஷா தயாரித்​துள்​ளார். இந்​தப் படம் கடந்த பிப்​.27-ம் தேதி வெளியானது.

இந்​நிலை​யில் இந்​தப் படத்​தைத் தடை செய்​யக் கோரி, கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. கேரளாவை வகுப்​பு​வாத கண்​ணோட்​டத்​தில் காட்​டு​வ​தாக​வும், இது சட்​டம், ஒழுங்கை பாதிக்​கக் கூடும் என்​றும் மனு​வில் குறிப்​பிடப்​பட்டு இருந்​தது. விசா​ரித்த நீதி​மன்​றம் 2 வாரங்​களுக்கு படத்தை வெளி​யிட இடைக்​காலத் தடை விதித்​தது. தயாரிப்​பாளர் சார்​பில் மேல் முறை​யீடு செய்​யப்​பட்​டதை அடுத்து படத்தை வெளி​யிட அனு​மதி வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இப்​படம் தொடர்​பான சர்ச்சை மீண்​டும் எழுந்துள்ளது. படத்​தின் தலைப்​பில் இடம்​பெற்​றுள்ள ‘கேரளா’ என்ற வார்த்​தையை நீக்​கக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட புதிய மனு​வின் அடிப்​படை​யில், தயாரிப்​பாளர் விபுல் ஷாவுக்கு கேரள உயர்​ நீ​தி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

கொச்​சி​யைச் சேர்ந்த யோஹன் ஜார்ஜ் தாக்​கல் செய்த மனு​வில், திரைப் ​படத்தின் தலைப்​பும் உள்​ளடக்​க​மும் கேரள மாநிலத்​தின் நற்பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்​து​வ​தாக​வும், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்​கும் வகை​யில் இருப்​ப​தாக​வும் குற்றம்சாட்​டப்​பட்​டுள்​ளது. மேலும், படத்​துக்கு வழங்​கப்​பட்ட தணிக்​கைச் சான்​றிதழை​யும் அவர் எதிர்த்​துள்​ளார்.

வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், படம் ஏற்​கெனவே வெளி​யாகி விட்ட நிலை​யில் இந்த மனு விசா​ரணைக்கு உகந்​த​தா ? என்று கேள்வி எழுப்​பி​னார். அதற்கு மனு​தா​ரர் தரப்​பு, படம் தற்​போது ஓடிடி தளத்​தி​லும் வெளி​யாகி​யுள்​ள​தால் அதன் தாக்​கம் தொடர்கிறது என்​றார். இதையடுத்​து, தயாரிப்​பாளருக்கு நீதிமன்றம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. வழக்​கின் விசா​ரணைக்​குரிய தன்மை குறித்து பின்​னர் முடிவு செய்​யப்​படும் என்​றும் நீதிமன்​றம் தெரி​வித்​தது.