惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Martin Fowler
Martin Fowler
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
IT之家
IT之家
云风的 BLOG
云风的 BLOG
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
P
Proofpoint News Feed
博客园_首页
J
Java Code Geeks
C
Check Point Blog
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
D
Docker
U
Unit 42
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
GbyAI
GbyAI
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம்: இ...
மு.சக்தி · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சென்னை: இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 18 வயதுடைய இளம் பெண் யான்சி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் எனக் கூறப்படும் யான்சி, தனது நண்பர்களுடன் பாருக்கு சென்றிருந்த நிலையில், அங்கு இருந்த மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் வன்முறையாக மாறி இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெண்ணை கார் ஏற்றி கொலை செய்வது மனித நேயமற்ற மற்றும் கடுமையாகக் கண்டிக்கத்தக்க குற்றச் செயலாகும்.

பெண்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகும் வகையில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. பெண்கள் மீதான வன்முறைகளையும், ஆணாதிக்க மனப் பான்மையையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

"பெண்ணின் உயிர் மலிவல்ல; நீதியே பதிலாக வேண்டும்". இளைஞர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சமூகத்திற்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும். சமூகமே தலைகுனியும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது. இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அவர்களை நல்வழிப் படுத்தும் பெற்றோர்களுக்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்க வேண்டிய அரசுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அனைவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.