惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
J
Java Code Geeks
P
Proofpoint News Feed
V
Visual Studio Blog
爱范儿
爱范儿
The Cloudflare Blog
博客园 - 叶小钗
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
M
MIT News - Artificial intelligence
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
H
Help Net Security
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
量子位
宝玉的分享
宝玉的分享
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்செங்கோடு கோயில் தேரோட்டத்தில் சோகம்: தேர் சக்கரத்தி...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

நாமக்கல்: ​திருச்​செங்​கோடு அர்த்​த​நாரீஸ்​வரர் கோயில் தேரோட்​டத்​தின்​போது தேர் சக்​கரத்​தில் சிக்கி கல்​லூரி மாணவர் உயி​ரிழந்​தார். மற்​றொருவர் காயமடைந்தார்.

நாமக்​கல் மாவட்​டம் திருச்​செங்​கோடு அர்த்​த​நாரீஸ்​வரர் மலைக்​கோயி​லில் வைகாசி தேர்த்​திரு​விழா தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது. அப்​போது, எதிர்​பா​ராத​வித​மாக தேர் நின்ற இடத்​தில் உள்ள சுவர் மற்​றும் தேர் சக்​கரத்​தின் இடையே இரு இளைஞர்​கள் சிக்கி நசுங்​கினர். அவர்​களை பக்​தர்​கள் மீட்​டு, திருச்​செங்​கோடு மருத்​து​வ​மனைக்கும் பின்​னர் சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கும் அனுப்பினர்.

இதில் திருச்​செங்​கோடு கூட்​டப்​பள்​ளியைச் சேர்ந்த தனி​யார் கல்​லூரி மாணவர் ஹர்​ஷவர்​தன் (20) சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்தார். இவரது நண்​ப​ர் வாலரைகேட் பகு​தி​யைச் சேர்ந்த கல்​லூரி மாணவர் சஷ்டிகன் இடுப்பு எலும்பு முறிவு ஏற்​பட்டு கோவை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டார். இதுதொடர்​பாக திருச்​செங்​கோடு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இக்​கோயி​லில் 450 ஆண்​டு​களாக பழமை​யான தேர் உலா வந்த நிலை​யில், ரூ.2.17 கோடி​யில் புதிய தேர் கட்​டப்​பட்டு 3 மாதங்​களுக்கு முன்​னர் வெள்​ளோட்​டம் நடை​பெற்று முதல்​முறை​யாக நேற்றுதான் தேரோட்​டம் நடந்​தது. இதனிடையே உயி​ரிழந்த இளைஞரின் குடும்​பத்​தினரைச் சந்​தித்து அமைச்​சர்​கள் அருண்​ராஜ், லோகேஷ் தமிழ்ச்​செல்​வன், தமிழன் பார்த்​திபன் ஆகியோர் ஆறு​தல் கூறினர்.

முதல்வர் நிவாரணம்: இதனிடையே இரங்​கல் தெரி​வித்து அறிக்கை வெளி​யிட்ட முதல்​வர் விஜய் உயி​ரிழந்​தவர் குடும்​பத்​துக்கு ரூ.5 லட்​சம் நிவாரணம் அறி​வித்​துள்​ளார். மேலும், காயமடைந்த சஷ்டிக​னுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்​க​வும் உத்​தர​விட்​டுள்​ள​தாக​வும் அவர் தெரி​வித்​துள்​ளார்.