惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Blog — PlanetScale
Blog — PlanetScale
G
Google Developers Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
腾讯CDC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Jina AI
Jina AI
雷峰网
雷峰网
T
Tailwind CSS Blog
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
博客园 - 司徒正美
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Vercel News
Vercel News
小众软件
小众软件
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்...
வெற்றி மயிலோன் · 2026-05-23 · via hindutamil

மு.வீரபாண்டியன் | கோப்புப் படம்

Updated on: 

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட புதிய விரிவானத் திட்டம் மத்திய அரசிடம் வழங்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர், “காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை. இது குறித்து ஒன்றிய நீர்வள ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமே அணை கட்ட பச்சைக்கொடியை காட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான அலுவலகத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். விரிவான திட்ட அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகு, இத்திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெறும். மேகேதாட்டுவில் அணை கட்டும் விஷயத்தில் அரசு உறுதியாகவுள்ளது” என்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று தெளிவான ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் கூறியுள்ள மேற்கண்ட கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், நதிநீர் பிரச்சனைகள் தொடர்பான சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானது.

மேலும் ஆறுகள் தோன்றி பாயும் பகுதிகளில் உள்ள நாடுகள் கடைமடை பகுதியில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி அணைகளை கட்டுவது கூடாது. அவ்வாறிருக்க கர்நாடகத்தில் அணைக் கட்ட தமிழகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை என அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நதி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கான நீர்வரத்து குறையும். இது தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனை, பொருளாதாரத்தை பாதிக்கும். மாநிலங்களிடையேயான உறவையும், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டையும் பாதிக்கும். எனவே இத்தகைய முயற்சியை கர்நாடக மாநிலம் உடனடியாக கைவிட வேண்டும். மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கிடக்கூடாது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாத்திட, மேகேதாட்டு அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்திட உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.