惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MyScale Blog
MyScale Blog
U
Unit 42
M
MIT News - Artificial intelligence
小众软件
小众软件
P
Proofpoint News Feed
雷峰网
雷峰网
L
LangChain Blog
S
SegmentFault 最新的问题
腾讯CDC
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
Docker
N
Netflix TechBlog - Medium
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு புகார்: வாக்கு எண்ண...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி பாஜகவிற்கு சாதகமாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கொல்கத்தாவில் உள்ள குதிராம் அனுசீலன் கேந்திரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ராங் ரூம் வாசலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் குணால் கோஷ் மற்றும் சசி பாஞ்சா ஆகியோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 23-ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் முடிந்து இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்திற்குள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாலை 3.30 மணிக்கு ஊழியர்களை வெளியேறச் சொல்லிவிட்டு, பின் 4 மணிக்கு அறை மீண்டும் திறக்கப்படும் என மின்னஞ்சல் அனுப்பியதில் முறைகேடு நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் உள்ள ஷகாவத் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு மம்தா பானர்ஜி நேரில் சென்றார். முன்னதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட அவர், "வாக்கு எண்ணும் மையங்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும். இயந்திரங்களை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது, இதை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பவானிப்பூரில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களம் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பு அறையினுள் சிசிடிவி காட்சிகளின்படி அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது; இது பட்டப்பகலில் நடக்கும் ஜனநாயகப் படுகொலை" என்று சாடியுள்ளது. தபால் வாக்குகள் கையாளுதலிலும் முறைகேடுகள் நடப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.