惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件
Vercel News
Vercel News
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
The Cloudflare Blog
L
LangChain Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
B
Blog RSS Feed
云风的 BLOG
云风的 BLOG
I
InfoQ
U
Unit 42
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
宝玉的分享
宝玉的分享
量子位
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சோதனை காலத்தில் துணை நின்ற திமுகவை காங்கிரஸ் மறப்பது நிய...
2026-05-06 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “சோதனையான நேரத்தில் துணை நின்ற திமுகவையும், ஸ்டாலினையும் மறப்பது நியாயமா என்ற கேள்வியை காங்கிரஸுக்கு நினைவூட்டுகின்றேன்” என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, “ சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தோம். அவர் மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்று பேசினார். அவரிடம், ‘நீங்கள் வெற்றி வாய்ப்பை இழந்த செய்தி என்னை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். எனவே நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் போட்டியிட்டு வெல்ல வேண்டும்’ என்றேன்.

உடனே அவர் என் கைகளை அழுத்தமாக பிடித்து, “இந்த வார்த்தையை நீங்கள் சொல்லக் கூடாது. நீங்கள் சட்டப்பேரவைக்குள் செல்லவேண்டும்” என உரிமையோடு கண்டிப்புடன் சொன்னார். நான் பெற்ற வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை என்பதே உண்மை.

நாடு முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பெரும் தோல்விகளையும், சோதனைகளையும் காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. அந்த காலக் கட்டங்களில் காங்கிரஸுக்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சி திமுக. எல்லா நிலையிலும் அவர்களுக்கு துணையாக நின்று வலிமை சேர்த்தவர் மு.க.ஸ்டாலின். இப்போது இந்தச் சூழலில் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இது எத்தகைய அரசியல் போக்கு என்று தெரியவில்லை.

பாஜகவை கொள்கை எதிரி என பெயரளவில்தான் விஜய் விமர்சித்து வந்தார். ஆனால், திமுகவை அரசியல் எதிரி என கடுமையாக சேதப்படுத்தினார். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்து வந்துள்ளது. சோதனையான நேரத்தில் துணை நின்ற திமுகவையும், ஸ்டாலினையும் மறப்பது நியாயமா என்ற கேள்வியை காங்கிரஸுக்கு நினைவூட்டுகின்றேன்” என்று கூறினார்