惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 司徒正美
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
Recent Announcements
Recent Announcements
B
Blog RSS Feed
C
Check Point Blog
The Cloudflare Blog
M
MIT News - Artificial intelligence
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
V
V2EX
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வ...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

பிராடிஸ்​லாவா: ஐ.​நா. பாது​காப்பு கவுன்​சிலில் இந்தியா​வுக்கு நிரந்தர இடம் வழங்​கப்பட வேண்​டும் என்று ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலி​யுறுத்தி உள்​ளார்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று முன்​தினம் இரவு ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராடிஸ்லாவா​வுக்கு சென்​றார். அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் இரு​வரும் நிருபர்​களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர்.

அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது: இந்​தி​யா, ஸ்லோவேக்​கியா இடையி​லான வர்த்தக உறவு வலு​வடைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்​டில் ஸ்லோவேக்​கி​யா​வின் முதல் செயற்​கைக்​கோளை இந்​தியா விண்​ணில் செலுத்​தி​யது. இந்​திய விண்​வெளி துறை அபார வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த துறை​யில் ஸ்லோவேக்​கிய நிறு​வனங்​கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்​கிறேன்.

இரு நாடு​கள் இடையே டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் தொடர்​பாக முக்கிய ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இந்​திய தொழிலாளர்​கள் ஸ்லோவேக்​கி​யா​வில் பணி​யாற்​று​வது தொடர்பாக முக்​கிய ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இரு நாடு​களும் அமை​தியை முன்​னிறுத்​துகின்​றன. அந்த வகை​யில் உலகத்​தின் அமை​திக்​காக நாங்​கள் ஒன்​றிணைந்து செயல்படுவோம். ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் இந்​தி​யா​வுக்கு வருகை தர வேண்​டும் என அழைப்பு விடுக்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ கூறிய​தாவது: ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தில் ஸ்லோவேக்​கியா அங்​கம் வகிக்​கிறது. இந்​தி​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானதை நாங்​கள் முழு​மனதோடு வரவேற்றோம். இந்​தி​யா​வின் மிக நீண்ட காலம் பிரதமர் என்ற பெரு​மையை நரேந்​திர மோடி பெற்​றிருக்​கிறார். அவரது தேர்​தல் வெற்​றிகள், உலக அரசி​யல் அதிச​யம் ஆகும்.

செயற்கை நுண்​ணறி​வு, தகவல் தொழில்​நுட்​பம், டிஜிட்​டல் ​மயத்தில் ஒட்​டுமொத்த உலகத்​துக்​கும் இந்​தியா முன்​னோடி​யாக விளங்​கு​கிறது. உலக பொருளா​தா​ரத்​தில் வளர்ந்த நாடு​களை​விட இந்​தியா அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இத்​தகைய சிறப்​புமிக்க இந்​தி​யா​வுக்கு ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் நிரந்தர இடம் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

11 ஒப்பந்தம் கையெழுத்து

இந்த சந்திப்பின்போது, இந்​திய தொழிலா​ளர்​களை ஸ்லோவேக்கியா​வில் பணி​யமர்த்​து​வது, பாது​காப்பு துறை​யில் பரஸ்​பரம் ஒத்​துழைப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பங்​கள் பரிமாற்றம், உயர்​கல்​வி- ஆராய்ச்​சி​யில் ஒத்​துழைப்​பு, ஆடியோ-வீடியோ உரு​வாக்​கம், ஸ்லோவேக்​கி​யா​வின் கோசிஸ் பல்​கலைக்​கழகத்​தில் இந்​தி​யா​வின் சார்​பில் ஏஐ இருக்​கை, குவான்​டம் கம்​யூனிகேஷன், இயற்கை வைத்​தி​யம், இந்​திய- ஸ்லோவேக்​கிய பல்கலைக்​கழங்​கள் இடையே ஒத்​துழைப்​பு, சுற்​றுலா, அறி​வியல் ஆகியவை தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 11 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

மேலும் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இணைந்து செயல்பட உறு​தி​யேற்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக இரு நாடு​கள் இடையே சிறப்​பு செயல்​ குழு​வை அமைப்​பது உள்​ளிட்​ட​வை தொடர்​பாக 3 அறிவிப்புகளும்​ வெளியிடப்​பட்​டன.

வந்தே மாதரம் பாடலுடன் வரவேற்பு

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஸ்லோவேக்கியா செல்வது இதுதான் முதல் முறை. அங்கு சென்ற மோடிக்கு, தலைநகர் பிராடிஸ்லாவாவில் பாரம்பரிய முறைப்படி ரொட்டி மற்றும் உப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரொட்டி என்பது செழிப்பையும், உப்பு என்பது மதிப்பு, பாதுகாப்பு மற்றும் நீடித்த நட்பைக் குறிப்பதால், ஸ்லோவேக்கியா வரும் விருந்தினர்களுக்கு ரொட்டி மற்றும் உப்புடன் வரவேற்பு அளிப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்படுகிறது.

ஸ்லோவேக்கியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுராஜ் பிளானர் பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் உள்ளூர் கலைஞர்கள் வந்தே மாதரம் பாடல் பாடியும், நாட்டுப்புற நடனம் ஆடியும் வரவேற்றனர். இது பிரதமர் மோடியை மிகவும் கவர்ந்தது. ஸ்லோவேக்கியா பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரான்ஸ் செல்கிறார்.

100-வது வெளிநாட்டு பயணம்

கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2019, 2024-ம் ஆண்டு மக்கள வைத் தேர்தல்களில் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

முதல் பதவிக் காலத்தில் அவர் 49 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். 2-வது பதவிக் காலத்தில் 27 வெளிநாடுகளுக்கு சென்றார். தற்போது 3-வது பதவிக் காலத்தில் ஸ்லோவேக்கியாவை சேர்த்து இதுவரை 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளார். ஒட்டு மொத்தமாக கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 100 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.