惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东
V
Visual Studio Blog
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
有赞技术团队
有赞技术团队
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Cloudflare Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
F
Fortinet All Blogs
Last Week in AI
Last Week in AI
M
MIT News - Artificial intelligence
小众软件
小众软件
月光博客
月光博客
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கம்: முற்பகல் 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 152 தொகு​தி​களுக்கு நடைபெறும் இத்தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகுதிகள் உள்​ளன. இவற்றுக்கு இன்றும், ஏப்ரல் 29-ம் தேதியும் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடக்கின்றன. முதல்​கட்​டத்​தில் 152 தொகு​தி​களுக்கு தற்போது வாக்​குப்​ப​திவு நடைபெற்று வருகிறது.

இதில், மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர். மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாதுகாப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர். காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள். பெர்ஹாம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, லிபிகா நினைவு பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, “நந்திகிராம் மற்றும் பபானிபூர் தொகுதியில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, சாமானிய மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். அமைதியைக் குலைக்க முனையும் எவரையும் நாங்கள் விரட்டியடிப்போம்” என தெரிவித்தார்.

தேர்தலுக்கு முதல் நாளான நேற்று இரவு 8 மணி அளவில் முர்ஷிதாபாத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவம் இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் நடந்தது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து எங்களால் உறுதியாகக் கூற முடியாது. நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எந்த நேரத்திலும் மற்றொரு அசம்பாவிதம் நடக்கலாம். அரசியல் தலைவர்கள் இங்கு வந்தனர். அதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

முர்ஷிதாபாத் பெட்ரோல் குண்டு வீச்சி சம்பவம் குறித்துப் பேசிய பாஜக தலைவர் திலீப் கோஷ், “முர்ஷிதாபாத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டம். அங்கு ஒவ்வொரு விஷயத்திலும் முறைகேடுகள் மலிந்துள்ளன. நாட்டில் எத்தகைய நிகழ்வுகள் நடந்தாலும் அவை அனைத்தும் அங்கும் எதிரொலிக்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும், வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்டபோதும் அங்கு கலவரங்கள் ஏற்பட்டன. எங்கள் கட்சி அலுவலகமும் கோயிலும் எரிக்கப்பட்டன. வங்கதேசத்தில் இருந்து பலர் இங்கு ஊடுருவியுள்ளனர். அவர்கள் இங்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆட்சி மாற்றம் நிகழும்போது அனைத்தும் முழுமையாக மாறிவிடும்” என தெரிவித்தார்.