惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
量子位
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News
D
Docker
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - Franky
Recent Announcements
Recent Announcements
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
MongoDB | Blog
MongoDB | Blog
D
DataBreaches.Net
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மகிழ்ச்சியே கல்வியின் அடையாளம்
அ.கிரேஸி மேரி · 2026-06-16 · via hindutamil

Updated on: 

புதிய கல்வியாண்டில், வண்ணமயமான பூக்களால் வகுப்பறைகள் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டன. பாடப் பகுதியை நடத்தும் முன்னர், “உங்களிடம் ஒரு கேள்வி?” என்று தொடங்கியது வகுப்பு.

ஆர்வத்தோடு அனைவரும் கேட்டனர். வழக்கமான கேள்விகளைத் தவிர்க்க நினைத் தேன். வீட்டில் உங்களது பெற்றோரிடம் உங்களுக்கு முரணான விஷயம் ஏதேனும் இருந்தால் கூறுங்களேன் என்று கேட்க... அனைவ ருடைய கண்களிலும் ஒருவிதமான மருட்சி.

சிலரிடம் குறுநகை, சிலர் குசுகுசு வெனப் பேசினர், ஒரு சிலர் பேசச் சொற்கள் இன்றித் திகைத்தனர். உங்களுடைய அனைத்துப் பார்வை களுக்கும் ஒரே பதில், இந்தக் கலந்துரையாடல் வகுப்பறையோடு முற்றுப்பெறும்.

வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளப் படாது, மிகவும் ரகசியமானது என்றேன். ஒரே நேரத்தில் வெளிவந்த அத்தனை பெருமூச்சுகளையும் தாங்காமல் வகுப்பறை திணறியது.

ஒப்பீடு

பலவிதமான பதில்கள். மதிப்பெண் போன்ற வழக்கமான காரணங்களுக்காகப் பெற்றோரிடம் திட்டு வாங்குவதைத் தவிர, பெரும்பாலான மாணவர்களிடம் வருத்தங்கள் இல்லை. அதே கேள்வி மாணவிகளிடம் வந்தபோது சற்றே வீரியம் அடைந்திருந்தது.

ஒரு மாணவி, எழுந்து நின்று பேசத் தொடங்கிய சில நொடிகளில் குரல் தழுதழுத்துச் சத்தமிட்டு அழுதார். ஆறுதல் கூறி தண்ணீர் கொடுத்துத் தேற்றிய பிறகு, என்னவென்று கேட்டேன். பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறினார். ஆச்சரியமாகப் பார்த்தபோது, “ஆமாம்! என் உறவினர் வீட்டு பிள்ளைகளெல்லாம் ‘டாப்பர்ஸ்’.

நிறைய மதிப்பெண் வாங்குறாங்க. அவங்களோட என்னை ஒப்பிட்டு என் மதிப்பெண்ணை ஒப்பிட்டு... அம்மா, அப்பா சொல்லிக் காட்டிக்கிட்டே இருக்காங்க” என்று விசும்பலோடு கூறினார்.

பல் துலக்கும் போதுகூட கையில் புத்தகத்தை வைத்து படிக்கச் சொல்வதாகக் கலங்கினார். ஒரு வழியாக ஆறுதல் கூறித் தேற்றினாலும், மனம் என்னவோ அங்கேயே நின்றது.

பெரும் சுமை

நானும் எனது வயதை ஒத்தவர்களும் பள்ளியில் படித்த காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சியோடு வளர்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அன்றும் வெவ்வேறு காரணங்களுக்காகச் சரிவரப் படிக்க முடியாமல், உயர் மதிப்பெண் வாங்க இயலாமல் மனச்சுமையை எதிர் கொண்டிருப்போம்.

அதைவிடப் பன்மடங்கு அதிகமான சிக்கல்க ளோடும் அடர்த்தியோடும் இன்றைய மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். இவை தற்கால மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் எனப் பெரியவர்கள் சிந்திக்கத் தவறுவது ஏன்?

தனி உலகம்

ஒப்பிட்டுக் கூறுவதன் மூலமாக முயற்சி தடைப்படும் என்பதைப் பெரியவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இன்றைக்குப் பள்ளி வகுப்பறையில் ஏற்படாத பல மாற்றங்கள் பின்னாளில் கல்லூரி செல்லும்போதோ, அதற்குப் பிறகோ ஏற்படலாம்.

அதற்கான அடிப்படைத் திறன்களை வளர்க்கும் இடம்தான் பள்ளி வகுப்பறை. எங்களைப் போன்றோரின் சிறுபிராயத்தில் நாங்கள் சுமந்த சுமைகளை இறக்கிவைக்கும் இடமாக விளையாட்டு மைதானங்கள் இருந்தன, நண்பர்கள் இருந்தனர், வீடும்கூட இருந்திருக்கலாம்.

ஆனால், நம் குழந்தைகளின் மனச்சுமையைத் தாங்கிப் பிடிக்கும் கரங்களாக நாம் ஏன் இருப்பதில்லை? நம்மைவிட நாம் வாழ்ந்த காலத்தைவிட பல்வேறு விதமான உள, புறச் சூழல் சிக்கல்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு உலகமாக இருப்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம். சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.

ஊக்கப்படுத்துவோம்

மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் குழந்தைகளிடம் பாராட்ட ஏராளமான விஷயங்கள் இருப்பதைப் பற்றி யோசிக்கலாம். சின்னஞ்சிறிய விஷயங்களுக்கும் அவர் களைப் பாராட்டி மகிழுங்கள்.

முன்பு வாங்கிய மதிப்பெண்ணையே இப்போது வாங்கினாலும் பாராட்டுங்கள். அதைவிட அதிகமாக வாங்கினாலும் பாராட்டுங்கள். வாங்கிய மதிப்பெண்ணைவிடக் குறையும்போது ஊக்கப்படுத்துங்கள்.

ஒப்பிட்டுக் குறை கூறும்போது எடுக்கவேண்டிய முயற்சி எடுபடாமல் போய்விடும். ஆறுதலும் உற்சாகமூட்டலும் அவர்களை வளர்த்தெடுக்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். மதிப்பெண்ணைத் தாண்டி சில குழந்தைகள் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அதன் அழகை ரசியுங்கள். இசையில் இன்பம் எய்துபவர் களாக இருப்பார்கள். நீங்களும் இசைந்து பாடுங்கள். சிலர் நடனம் ஆடுவதில் விருப்பத்துடன் இருப்பார்கள். உங்களால் இணைந்து ஆட முடியாவிட்டாலும், கைதட்டி வரவேற்றுப் பாருங்களேன்.

எல்லாரும் ஒன்றுபோல் இருந்து விட்டால் உலகம் எவ்வாறு இயங்கும் என்கிற இயற்கை விதியை ஏற்போம். குழந்தைகள் யாரோ அல்ல, எதிர்காலத்தை ஆளப்போகும் தலைமுறை யினர். அவர்கள் எல்லாவிதமான ஆற்றலையும் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து உற்சாகப்படுத்துங்கள்.

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், எஸ். ஆர். வி. பள்ளி, திருச்சிராப்பள்ளி; agracy5533@gmail.com