惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
J
Java Code Geeks
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
腾讯CDC
博客园 - 司徒正美
B
Blog RSS Feed
博客园 - 三生石上(FineUI控件)
I
InfoQ
N
Netflix TechBlog - Medium
L
LangChain Blog
博客园_首页
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
美团技术团队
The Cloudflare Blog
爱范儿
爱范儿
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
H
Help Net Security
Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கம்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள்...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தமுள்ள 294 சட்​டப்​பேர​வைத் தொகுதிகளுக்கு இன்று மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்​டங்​களாக தேர்​தல்கள் நடக்கின்றன. இன்று 152 தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடைபெற்று வருகிறது. இதில், மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர். 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்​ளனர். மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாதுகாப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர். மாலை 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள்.

அலிபூர்துவார், பன்குரா, பிர்பூம், கூச் பெஹார், தெற்கு தினாஜ்பூர், டார்ஜிலிங், ஜல்பைகுரி, ஜார்கராம், மால்டா, புருலியா, வடக்கு தினாஜ்பூர், மேற்கு மிட்னாபூர், கலிம்போங் உள்ளிட்ட நகரங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பணி நிமித்தமாக மேற்கு வங்கத்துக்கு வெளியே சென்ற தொழிலாளர்கள் பலரும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்கும் நோக்கில் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. முதல்முறை வாக்காளர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது வாக்கினை செலுத்திவிட்டு அதுகுறித்த செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பலர் குழுவாகவும் புகைப்படங்களை பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில் தேர்தல், வாக்காளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு திருவிழாவாக மாறி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாந்தனு சென், “மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் விதத்தைப் பார்க்கும்போது பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மம்தா பானர்ஜியை நான்காவது முறையாக முதல்வராக அவர்கள் வாக்களித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குமார்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்காரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து சர்க்கார், “குமார்கஞ்ச் பகுதியில் எங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் பலர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நான் 24ம் எண் வாக்குச்சாவடிக்குச் சென்றபோது அவர்கள் எங்களை தாக்கினர். இது அச்சமூட்டும் சூழலை உருவாக்கும் முயற்சி” என குற்றம் சாட்டினார்.

மற்றொரு பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பால், தனது கார் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ரஹ்மத் நகர் பகுதிக்குச் சென்றபோது பாறை போன்ற ஒரு பெரிய கல் எனது காரின் மீது வீசப்பட்டது. இதில் காரின் பின்பகுதி முழுமையாக சிதைந்து போனது. கண்ணாடிகள் முற்றிலுமாக நொறுங்கிவிட்டன.

இறைவன் அருளால் எனக்கோ, எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும், காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த எனது செயலாளர் சிறிய அளவில் காயமடைந்தார். இதுபோன்ற சம்பவங்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரியக்கூடியதே” என தெரிவித்தார்.