惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
F
Fortinet All Blogs
B
Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
腾讯CDC
小众软件
小众软件
G
Google Developers Blog
V
Visual Studio Blog
罗磊的独立博客
GbyAI
GbyAI
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
H
Help Net Security
L
LangChain Blog
Engineering at Meta
Engineering at Meta
量子位
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 司徒正美
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மிதக்கும் வீட்டில் ஒருநாள்! | புதிய வானம் புதிய பூமி
2026-05-24 · via hindutamil

Updated on

1 min read

நாங்கள் வசிக்கும் காரைக்குடியில் பெரும்பாலான நாள்கள் வெயிலாகத்தான் இருக்கும். அதனால், கன்னியாகுமரிக்கும் கேரளத்தின் ஆலப்புழைக்கும் செல்லத் திட்டமிட்டுப் புறப்பட்டோம். நாங்கள் போனபோது லேசான மழைத்தூறல் இருந்ததால் சூரிய உதயத்தைப் பார்க்க முடியவில்லை. பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்புகையில் வானுயர்ந்த குமரி திருவள்ளுவர் சிலையைக் கண்டதும் தமிழராகப் பிறந்ததன் பெருமையைப் பெற்றேன். அந்தப் பெருமையோடு நடந்து சென்றபோது முக்கடல் சங்கமம் வந்துவிட்டது. மூன்று கடல்களின் தண்ணீரும் வேறு வேறு நிறத்தில் இருக்கும் அறிவியலின் அதிசயம் நம்மை வியக்க வைக்கும்.

விவேகானந்தர் பாறைக்குப் படகில் சென்றோம். நாங்கள் சென்றபோது கண்ணாடிப் பாலம் அமைத்திருக்கவில்லை. அதற்காகவே மீண்டும் செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். பாறையின் மீது அடிக்கும் அலையின் துளிகள் நம் மேல் விழுந்தபோது எழுந்த பரவசத்தோடு மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு, சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குச் சென்று அந்த நாளை முடித்தோம்.

மறுநாள் திற்பரப்பு அருவிக்குச் சென்றோம். வெள்ளம் இல்லாததால் தண்ணீரின் வருகை நிதானமாக இருந்தது. குளித்துவிட்டுக் கிளம்பினோம். சுற்றியும் ரப்பர் மரங்களுக்குள் வாகனம் செல்வது கண்களுக்கு இன்பமாக இருந்தது. அடுத்து நம் முன்னாள் முதல்வர் காமராஜர் கட்டிய மாத்தூர் தொட்டிப் பாலத்துக்குச் சென்றோம். தொட்டிப் பாலத்தின் நடுவே நின்று இருபுறமும் பார்த்தால் உயிர் நடுக்கம் வந்துவிடும். தமிழகத்தைக் கடந்து கேரளத்துக்குள் வண்டி நுழைய, அந்த மாநிலம் எங்களை மழையோடு வரவேற்றது.

காலையில் ஆலப்புழை வந்துவிட்டோம். நாங்கள் 15 பேர் இருந்ததால் எங்களுக்கு எனத் தனிப்படகையே வாடகைக்கு எடுத்துவிட்டோம். எங்கள் படகில் கழிப்பறையுடன் இரண்டு அறைகள், சமையலறை, சிறிய வரவேற்பு அறையுடன் கூடிய உணவறையும் இருந்தன. வரவேற்புப் பானம் கொடுத்து வரவேற்றனர். மனதுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி படகுப் பயணம் மெதுவாகத் தொடங்கியது.

நான்கு பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டு நிறைய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவர்கள் எப்படி வெளியே செல்வார்கள் என யோசித்தபோதே, சிறிய படகில் வயதான அம்மா ஒருவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சிறிய படகு அல்லது தோணி கட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் படகில்தான் செல்வார்களாம். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள்வரை எல்லாருக்கும் படகு செலுத்தத் தெரிந்திருந்தது.

சிறிது நேரத்தில் சிறிய தீவு போன்ற பகுதியில் மதிய உணவுக்கு நிறுத்தினார்கள். கேரளத்தின் அரிசிச் சோறு, மீன் குழம்பு, மீன் வறுவல் என அருமையாக இருந்தது. மீண்டும் பயணம் தொடங்கியது. மாலை நெருங்கியவுடன் சுடச் சுட தேநீரும் வெங்காய பஜ்ஜியும் கொடுத்தார்கள். அழகிய பசுமையான நினைவுகளுடன் மாலை 5 மணிக்குப் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே ஊருக்குப் புறப்பட்டோம்.

- இரா. முத்துலெட்சுமி பாஸ்கரன், காரைக்குடி.