惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
L
LangChain Blog
博客园 - 司徒正美
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
Vercel News
Vercel News
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மே 21 முதல் 3 நாட்கள...
2026-05-19 · via hindutamil

Updated on

1 min read

புது டெல்லி: எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடகை கட்டணங்களை உயர்த்தக் கோரி, டெல்லியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் மே 21 முதல் மே 23 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை இந்த வாரத்தில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் லிட்டருக்கு 90 பைசா உயர்த்தப்பட்டது. 4 நாட்கள் இடைவெளியில் நிகழ்ந்த இரண்டாவது விலை உயர்வு இதுவாகும். மேலும், டெல்லியில் பெரும்பாலான டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி-யின் விலையும் உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.2 அதிகரித்து, சிஎன்ஜியின் விலை ரூ.87-ஐ எட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வு காரணமாக டாக்ஸி, ஆட்டோ கட்டணங்களை உயர்த்த, அதன் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பு, நேற்று டெல்லி ஆளுநர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் முதல்வர் ரேகா குப்தா ஆகியோருக்குக் கடிதம் எழுதியது. அதில், இப்பிரச்சினையில் தலையிட்டு, உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த சூழலில், டெல்லியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் மே 21 முதல் மே 23 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதனால் டெல்லிவாசிகள் மேலும் ஒரு நெருக்கடியைச் சந்திக்கவுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் டெல்லியில் உள்ள தினசரி பயணிகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உள்ளூர் பயணங்களுக்கு டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களையே பெரிதும் சார்ந்திருப்பவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.