惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
D
DataBreaches.Net
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
博客园_首页
博客园 - 司徒正美
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 【当耐特】
D
Docker
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குவாரிகளை அரசே எடுத்து நடத்த வேண்டும்: இயற்கை வள பாதுகாப்...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக அரசு குவாரிகளை குத்தகைக்கு விடாமல், தானே எடுத்து நடத்த வேண்டும் என, இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், ரா.சா.முகிலன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 34 ஆறுகள், தற்போது, ஆறு என்ற தன்மையை இழந்து உயிரற்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு மணல் குவாரிகளே முக்கிய காரணம். தமிழகத்தின் மணல் தேவையை சரி செய்ய வெளிநாட்டில் இருந்து மாதம் 15 லட்சம் டன் இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்ய வேண்டும். ஏற்கனவே, வெளி நாடுகளில் இருந்து மாதம் 5 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய அரசாணைகள் போடப்பட்டன. ஆனால், அவை முறையாக நடைமுறைப் படுத்தவில்லை.

வெளிநாட்டில் இருந்து மாதம் 15 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்தால், தமிழகத்தின் தினசரி மணல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இந்த நடை முறையில் அரசுக்கு நேரடியாக முழு வருமானமும் கிடைக்கும். யாரும் இடையில் ஒரு பிடி மணலை கூட எடுக்க முடியாது.

மேலும், தமிழகத்தில் தற்போது 2 ஆயிரம் குவாரிகள் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. ஆனால், அனுமதி பெறாமலும், அனுமதி காலம் முடிந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகின்றன. அனுமதி காலம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அந்த குவாரிகளில் வளங்கள் எடுக்கப் படுகின்றன. அனுமதி காலம் முடிந்த குவாரிகளில் டிஜிட் டல் ட்ரோன் சர்வே நடத்தி, சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட வளங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இந்த ட்ரோன் சர்வே தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. அதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுகின்றன. எனவே, அரசே இந்த ட்ரோன் சர்வே நடத்த வேண்டும்.

மேலும், தமிழக அரசு குவாரிகளை குத்தகைக்கு விடாமல், தானே எடுத்து நடத்த வேண்டும். குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தமிழக அரசுக்கு தனக்கு இருக்கும் கடனை எளிதாக அடைக்க முடியும். விரைவில் அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.