惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Tailwind CSS Blog
P
Proofpoint News Feed
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
Vercel News
Vercel News
Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
博客园 - 聂微东
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
美团技术团队
H
Help Net Security
aimingoo的专栏
aimingoo的专栏
C
Check Point Blog
U
Unit 42
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
என்றென்றும் புன்னகை, கலகல பேச்சு... மக்களின் மனம் கவர்ந்த...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-01 · via hindutamil

Updated on: 

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) மூத்த பேருந்து ஓட்டுநரான ஜோசப் மச்சாடோ 34 ஆண்டு கால சிறப்பான மற்றும் களங்கமற்ற பணிக்காக மக்களாலும் நிர்வாகத்தாலும் பெரிதும் பாராட்டுகளை ஈர்த்த ஓட்டுநர்.

இதில் 22 ஆண்டுகள் வோல்வோ பேருந்து இயக்கிய அவர், தனது பணிக்காலத்தை எந்தவித விபத்தும் ஏற்படுத்தியதில்லை. மேலும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத சாதனை ஓட்டுநர் என்ற மனநிறைவுடன், மக்களாசியுடன் மே 30-ம் தேதியன்று ஓய்வு பெற்றுள்ளார் மச்சாடோ. உடுப்பி மாவட்டத்தின் உத்யாவராவைச் சேர்ந்த ஜோசப் மச்சாடோ, 2002-ஆம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சி. வோல்வோ பேருந்துகளை அறிமுகப்படுத்தியபோது தேர்வு செய்யப்பட்ட முதல் ஓட்டுநர்கள் குழுவில் ஒருவராக இருந்தார்.

பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த சேவை பின்னர் மங்களூருவுக்கும் விரிவாக்கப்பட்டது. தனது பணிக்காலத்தில் பல்வேறு உயர்தர மற்றும் சொகுசுப் பேருந்து சேவைகளை அவர் இயக்கியுள்ளார். ஆயிரக்கணக்கான பயணிகளை பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் ஊருக்குக் கூட்டிச் சென்ற மச்சாடோவுக்கு, ஓய்வுக்கு முன்னதாக சக ஊழியர்கள் மற்றும் அவரை நேசித்த பயணிகள் சிறப்பான பிரியாவிடை அளித்தனர். மே 29 அன்று மும்பை – மங்களூரு ஏராவத் கிளப் கிளாஸ் பேருந்தை இயக்கியபோது, அவருக்கு அன்பான பிரியாவிடை வழங்கப்பட்டது.

அவரை நன்கு அறிந்த பயணிகள், “எப்போதும் புன்னகையுடன் இருப்பவர், பயணிகளிடம் அன்பாக நடந்து கொள்வவர், ஒருபோதும் தாமதமாக வராதவர், வேகமாகவோ ஆபத்தாகவோ வாகனம் ஓட்டாதவர்” என்று பாராட்டினர். மங்களூரு, புனே, மும்பை மற்றும் பெங்களூரு வழித்தடங்களில் பயணித்த எண்ணற்றோர், அவரது பாதுகாப்பான ஓட்டுநர் திறமையாலும் கனிவான அணுகுமுறையாலும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பெற்றதாக தெரிவித்தனர்.

1992-ஆம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சியில் பணியில் சேர்ந்த மச்சாடோ, முதலில் குந்தாபுரா பணிமனையில் நியமிக்கப்பட்டார். அப்போது கொல்லூர் – சென்னை ராஜஹம்சா சேவையை இயக்கிய அவர், பின்னர் அது வோல்வோ பேருந்து சேவையாக மேம்படுத்தப்பட்டபோதும் தொடர்ந்து பணியாற்றினார். 2008-ஆம் ஆண்டில் மங்களூரு பணிமனைக்கு மாற்றப்பட்ட அவர், மங்களூரு – சென்னை ஏராவத், மங்களூரு – மும்பை ஏராவத் மற்றும் மங்களூரு – புனே அம்பாரி உத்சவ் உள்ளிட்ட முக்கிய சேவைகளில் ஓட்டுநராகப் பணியாற்றினார்.

தனது கடைசி பணியாக மே 29 அன்று மும்பை – மங்களூரு ஏராவத் கிளப் கிளாஸ் பேருந்தை இயக்கியதாக அவர் கூறினார். 2018-ஆம் ஆண்டு திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, ஆறு மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி அரசுப் போக்குவரத்துக் கழகம் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும், சக ஊழியர்கள் மற்றும் மங்களூரு மூத்த பிரிவு கட்டுப்பாட்டாளர் ராஜேஷ் ஷெட்டி ஆகியோரின் அன்பும் ஒத்துழைப்பும் தனது பணிக்காலத்தை இனிமையாக்கியது என்றார்.

ஜோசப் மச்சாடோவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் துபாயில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மணிப்பாலில் பி.எஸ்சி படித்து வருகிறார். தனது நீண்ட பணிப் பயணத்தை நிறைவு செய்துள்ள மச்சாடோ, பயணிகளின் அன்பும் மரியாதையும் தன்னுடைய மிகப்பெரிய சொத்து என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

ஓர் ஓட்டுநர் இவ்வாறு 34 ஆண்டுகாலம் களங்கமற்ற விதத்தில் பணியாற்றி, மக்களின் அன்பையும் நேயத்தையும் வெல்வது என்பது அனைவருக்கும் இயலாத ஒன்று. அந்த விதத்தில் மச்சாடோவின் பணி ஒரு ரோல் மாடலாகப் பார்க்கப்படுகிறது.