惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
有赞技术团队
有赞技术团队
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
Y
Y Combinator Blog
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுட...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

கியோஞ்சர்: ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்.27) அவரின் எலும்புக் கூட்டையே தோண்டியெடுத்து வங்கிக்கு கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கியோஞ்சரின் பட்னா வட்டாரத்தில் உள்ள மாலிபாசி பகுதியைச் சேர்ந்த ஜிது முண்டா (55) என்ற பழங்குடியின நபர், இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த தனது சகோதரி கலரா முண்டாவின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20,000-ஐ எடுக்க பட்னா வட்டாரத்தில் உள்ள ஒடிசா கிராமீன் வங்கியின் மாலிபாசி கிளையை அணுகினார். வங்கி அதிகாரிகள், வங்கிக் கணக்கு உள்ள நபரையோ அல்லது அவர் உயிரிழந்தது தொடர்பான ஆவணங்களையோ சமர்ப்பிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்த புரிதல் இல்லாத அந்த நபர், கல்லறையை தோண்டி உயிரிழந்த தனது சகோதரியின் எலும்புக் கூட்டை வங்கிக்கே எடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் பலமுறை வங்கிக்கு அலைந்து திரிந்தேன். ஆனால், அவரது பெயரில் வைப்புத் தொகையாக உள்ள பணத்தை எடுக்க வேண்டுமென்றால், கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு அங்கிருந்தவர்கள் என்னிடம் கூறினர். அவர் இறந்துவிட்டார் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் பிடிவாதமாக ஆதாரம், ஆவணம் கேட்டனர்.

எனவே, விரக்தியின் காரணமாக, நான் அவரது கல்லறையைத் தோண்டி, இறந்துவிட்டார் என்பதற்குச் ஆதாரமாக அவரது எலும்புக் கூட்டை எடுத்து வந்தேன்" என்று ஜிது முண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட்னா காவல் நிலைய ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு பேசுகையில், “ஜிது முண்டா ஒரு கல்வியறிவு பெறாத பழங்குடியின நபர். சட்டப்பூர்வ வாரிசு மற்றும் நியமனதாரர் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. இறந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான நடைமுறையை அவருக்குப் புரிய வைப்பதில் வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர்" என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியதை தொடர்ந்து பேசிய உள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மனஸ் தண்ட்பத், “இன்றுதான் எனக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் ஆராய்வோம்" என்று கூறினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் தலையிட்டு, அந்தப் பழங்குடியினரின் மறைந்த சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்குத் தாங்களே ஏற்பாடு செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தனர். இதன் பின்னர் ஜிதுவின் சகோதரியின் எலும்புக் கூட்டு எச்சங்கள் காவல் துறையினரின் மேற்பார்வையின் கீழ் அடக்கம் செய்யப்பட்டன.