惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX
博客园 - 叶小钗
雷峰网
雷峰网
小众软件
小众软件
量子位
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
Martin Fowler
Martin Fowler
G
Google Developers Blog
博客园_首页
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இந்து கலாச்சார உரிமை இது...” - திருப்பரங்குன்றம் விவகாரத...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

Updated on: 

சென்னை: “திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை இந்து கலாச்சார உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது என்பது தமிழக இந்துக்களின் அடிப்படை சமய உணர்வு மற்றும் கலாச்சார உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டபோதுதான் மக்கள் தங்கள் ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், இந்துக்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.

சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, இந்துக்கள் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டனர். தமிழக மக்கள் கடந்த காலங்களில் இத்தகைய போக்கை நிராகரித்துள்ளனர். தற்போதைய அரசும் அதே பாதையில் செல்வது வருத்தமளிக்கிறது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம், அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பதாகக் கருதலாம்.

ஆனால், மறுக்கப்படுவது இந்துக்களின் சமய உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி என்பதை அரசு உணர வேண்டும். இந்த விவகாரத்துக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த இளைஞர் பூரணச் சந்திரனின் தியாகத்தையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் ஒரு சட்டப் போராட்டமாகவோ அல்லது மத மோதலாகவோ மாற்றப்படக்கூடாது. மாறாக, இது இந்து சமூகத்தின் உணர்வுபூர்வமான மற்றும் கலாச்சார உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்.

எனவே, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்குமாறும், இந்த நீண்டகால சமய நடைமுறையை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த உறுதி செய்யுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.