惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
云风的 BLOG
云风的 BLOG
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
阮一峰的网络日志
阮一峰的网络日志
Martin Fowler
Martin Fowler
C
Check Point Blog
MongoDB | Blog
MongoDB | Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
罗磊的独立博客
博客园 - 司徒正美
S
SegmentFault 最新的问题
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
Last Week in AI
Last Week in AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 叶小钗
小众软件
小众软件
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சித்திரைத் திருவிழாவின்போது மோதல்: மதுரையில் முன்விரோதத்த...
செய்திப்பிரிவு · 2026-05-26 · via hindutamil

Updated on: 

மதுரை: சித்​திரைத் திரு​விழா​வின்​போது ஏற்​பட்ட மோதல் காரண​மாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறு​வன் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக, சிறு​வன் உள்பட 5 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

மீனாட்சி அம்​மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதிபகு​தி​யில் மாநக​ராட்​சிக்கு சொந்​த​மான வாக​னக் காப்​பகம் செயல்​படு​கிறது.

இங்கு நேற்று முன்​தினம் நள்​ளிரவு நின்​றிருந்த குபேந்​திரன் என்ற 17 வயது சிறு​வனை, இரு சக்கர வாக​னத்​தில் வந்த 5 பேர் கும்​பல் சரமாரி​யாக வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தப்​பியது.

இதுகுறித்து விளக்​குத்​தூண் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, அப்​பகு​தி​யிலுள்ள கண்​காணிப்பு கேமரா காட்​சிகளின் பதிவு​களை ஆராய்ந்​தனர். அதில் சிறு​வன் குபேந்​திரனை, 2 இரு சக்கர வாக​னங்​களில் வந்த கும்​பல் சரமாரி​யாக வெட்​டியது.

அவர்​களிட​மிருந்து தப்​பிக்க முயன்ற சிறு​வனை விடா​மல் துரத்​திச் சென்று வெட்டி படுகொலை செய்​து​விட்டு அக்​கும்​பல் தப்​பிச் சென்​றது தெரிய​வந்​தது.

விசா​ரணை​யில், கடந்த மாதம் சித்​திரைத் திரு​விழா​வின்​போது, சிறு​வன் குபேந்​திரனுக்​கும், முத்​து​மணி என்ற தொத்​தல் முத்​து​மணி என்​பவருக்​கும் இடையே வடக்​கு​மாசி வீதி அரு​கிலுள்ள கழிப்​பறை​யில் மோதல் ஏற்​பட்​டது.

இதில் இரு​வரும் ஒரு​வரையொரு​வர் தாக்​கிக்​கொண்​டனர். அதில் முத்​து​மணி காயமடைந்​தார். இந்த முன்​விரோதம் காரண​மாக, ஆத்​திரமடைந்த முத்​து​மணி குபேந்​திரனை கொலை செய்ய திட்​ட​மிட்டு காத்​திருந்​ததாக தெரிகிறது. அதன்​படி, முத்​து​மணி, அவரது தம்பி ராஜ் உள்​ளிட்ட 5 பேர் கொண்ட கும்​பல் குபேந்​திரனை சரமாரி​யாக வெட்​டிக் கொன்​றது.

இதுதொடர்​பாக விளக்​குத்​தூண் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, திடீர் நகரரைச் சேர்ந்த முத்​து​மணி, அவரது தம்பி ராஜ், முத்​துக்​கு​மார், மேல​வாசல் பகுதியைச் சேர்ந்த சதீஸ்​கு​மார், வடக்​கு​மாசி வீதி​யைச் சேர்ந்த 18 வயது சிறு​வன் ஆகியோரை கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து கொலைக்கு பயன்​படுத்​திய அரி​வாள் உள்​ளிட்ட ஆயுதங்​கள், பைக்​கு​களை போலீஸார் பறி​முதல் செய்​தனர்.

மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்றும் கைதானவர்கள் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொலையான குபேந்​திரன் மீது 5-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். கொலை​யாளி​களை விரைந்து கைது செய்த போலீ​ஸாரை, காவல் ஆணை​யர் அபிஷேக் தீக்​சித் பாராட்​டி​னார்.