惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
News and Events Feed by Topic
T
The Exploit Database - CXSecurity.com
P
Palo Alto Networks Blog
T
Threat Research - Cisco Blogs
Cloudbric
Cloudbric
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
I
Intezer
Attack and Defense Labs
Attack and Defense Labs
P
Privacy International News Feed
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
L
Lohrmann on Cybersecurity
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
V2EX - 技术
V2EX - 技术
AWS News Blog
AWS News Blog
O
OpenAI News
L
LINUX DO - 最新话题
N
News | PayPal Newsroom
PCI Perspectives
PCI Perspectives
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
T
Troy Hunt's Blog
Latest news
Latest news
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
A
Arctic Wolf
Spread Privacy
Spread Privacy
G
GRAHAM CLULEY
T
Tor Project blog
博客园_首页
Know Your Adversary
Know Your Adversary
有赞技术团队
有赞技术团队
S
Secure Thoughts
美团技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
T
Tailwind CSS Blog
Application and Cybersecurity Blog
Application and Cybersecurity Blog
V
Visual Studio Blog
J
Java Code Geeks
Cisco Talos Blog
Cisco Talos Blog
Schneier on Security
Schneier on Security
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
S
Security Affairs
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理
雷峰网
雷峰网
宝玉的分享
宝玉的分享
量子位
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
罗磊的独立博客
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
18 நாட்கள், 48,000 பேர் வேலைநிறுத்தம் - சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் அறிவிப்பால் உலகமே அதிர்வது ஏன்?
பாரதி ஆனந்த் · 2026-05-20 · via hindutamil

Updated on: 

உலகெங்கிலும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதும், வேலைநிறுத்தம் செய்வதும் நடப்பதுதான். ஆனால், தென் கொரியாவின் மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் சங்கம் (SELU - Samsung Electronics Labour Union) ஒரு மெகா வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. நாளை மே 21 தொடங்கும் இந்த வேலைநிறுத்தம் தொடர்ச்சியாக 18 நாட்கள் நடைபெறும் என்று ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கான ஊதியத்தில் பேதம் நிலவுவதாகவும், போனஸ் வழங்குவதில் நீடிக்கும் சிக்கலை முன்வைத்தும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. சாம்சங் நிறுவனத்தின் வரலாற்றில் இத்தனை நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் 18 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை உலகமே உற்று நோக்கத் தொடங்கியுள்ளது. அது ஏன்? இந்தப் போரட்டம் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பன குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

<div class="paragraphs"><p>அரசு முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைதோல்வி அடைந்த நிலையில் வெளியேறும் சாம்சங் ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி</p></div>

அரசு முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைதோல்வி அடைந்த நிலையில் வெளியேறும் சாம்சங் ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் எதிர்பார்ப்பு என்ன?

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர் சங்கமானது, நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கும் போனஸ் தொகையின் உச்சவரம்பை ஊழியர்களின் ஆண்டு வருமானத்தில் 50% என நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும், வருடாந்திர செயல்பாட்டு லாபத்தில் 15%-ஐ ஊழியர்களுக்கான போனஸ் தொகுப்பில் செலுத்தி அதை ஊழியர்களுக்கு பிரித்துத் தர வேண்டும், போட்டி நிறுவனங்கள் வழங்குவதைவிட மிகக் குறைவான ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். அதுவும் இந்த மாற்றங்கள் இந்த ஆண்டுக்கு என்று மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி ஊழியர்களுக்கு பலனளிக்கும்படி தொடரச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

கேட்டதும், கிடைத்ததும்...

போனஸ், ஊதிய பாகுபாடுதொடர்பான இந்த கோரிக்கை இந்தாண்டு ஜனவரி தொடங்கியே புகைந்து கொண்டிருக்க, மார்ச் மாதம் ஊழியர்கள் சங்கத்துடன் சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்கே ஹினிக்ஸ் (SK Hynix) எனப்படும் மற்றொரு குறைகடத்தி நிறுவனம், அதன் மெமரி சிப் தயாரிப்பு பிரிவு ஊழியர்களுக்கான ஊதியம், போனஸ் திட்டதோடு ஒப்பிட்டு போனஸ் விகிதத்தில் மாற்றம் செய்யப்படும் என்றது.

மேலும், லாஜிக் சிப் தயாரிப்புப் பிரிவு தொழிலாளர்கள் 50% முதல் 100% வரையிலான போனஸை பெறலாம், ஆனால் அது ஆண்டுக்கு ஒரு முறை என்றளவில் இருக்கும் என்றது. அதாவது, ஆண்டு வருமானத்தில் 50% தான் போனஸ் என்ற உச்ச வரம்பு நீக்கப்படாது என்றது.

உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் மெமரி சிப்களுக்கு தட்டுப்பாடு வர தென் கொரியாவின் சாம்சங் மற்றும் அதன் பிரதான எதிரி நிறுவனமான எஸ்கே ஹினிக்ஸ் தயாரிப்பை துரிதப்படுத்தி கொள்ளை லாபத்தை குவித்தன. உலகின் ஒட்டுமொத்த மெமரி சிப் தேவையின் பெரும் பகுதியை இந்த இரண்டு நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு எஸ்கே ஹினிக்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்கான போனஸ் வழங்கலில் நிலவிய உச்ச வரம்பை 10 ஆண்டுகளுக்கு நீக்கியது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சாம்சங் ஊழியர்களைவிட அதிகமான போனஸைப் பெறக் கூடிய சூழல் உருவாகியது. இதனால் சாம்சங் நிறுவன ஊழியர்கள் பலரும் எஸ்கே ஹினிக்ஸ் நிறுவனத்துக்கு தாவினார்கள்.

இந்த நிலையில்தான் ஊதிய பாகுபாட்டை களைய வேண்டும், போனஸ் பே அவுட் விதிகளில் மாற்றம் வேண்டும் என்ற குரல் சாம்சங்கில் ஓங்கி ஒலிக்கிறது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு, சாம்சங் ஊழியர்கள் 6000 பேர் இதேபோன்றதொரு போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் இந்தமுறை 48 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களில் 38% ஆகும்.

இந்தச் சூழலில், சாம்சங் நிறுவனம் கடந்த திங்கள்கிழமையன்று ஊழியர்களின் இந்த மெகா வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக தடையாணை கோரி நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “எந்தவொரு தொழிற் போராட்டத்தின் போதும் சில உற்பத்தி ஆலைகளில் அத்தியாவசியப் பணியாளர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும்,” என்று தீர்ப்பளித்தது.

இதை ஊழியர்கள் சங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ள, சாம்சங் நிறுவனமும் கோர்ட் விதிமுறையின் படி வேலைநிறுத்தம் நடந்தாலும் 7,087 ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தென் கொரியாவின் பியாங்டக் மற்றும் ஹவாசியோங்கில் உள்ள சாம்சங் மெமரி சிப் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியது. அங்கே மூன்று ஷிஃப்ட்களிலும் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

போராட்டம் தொடங்கவுள்ள நிலையில், இந்த நீதிமன்ற உத்தரவு எப்படி அமலாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

உலகமே உற்று நோக்குவது ஏன்?

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் 18 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை உலகமே உற்று நோக்கத் தொடங்கியுள்ளது.

ஏனெனில் சாம்சங் தான் உலகின் DRAM சிப் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஆண்டின் முடிவில் உலகத்தின் ஒட்டுமொத்த DRAM சிப் தேவையில் 36%-ஐ சாம்சங் பூர்த்தி செய்தது. ஏஐ டேட்டா மையங்களின் அத்தியாவசியத் தேவையாக இந்த மெமரி சிப்கள் இருக்கின்றன. இந்த நிலையில் உலகளவில் மெமரி சிப்களுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலுவும் சூழலில் இந்த வேலைநிறுத்த அறிவிப்பு எல்லைகள் கடந்த கலக்கத்தைக் கடத்தியுள்ளது.

என்னவாகும் இந்தப் போராட்டத்தால்..?

சர்வதேச தொழில்துறை அனலிஸ்ட் ஜெஃப் கிம், சாம்சங் ஊழியர்கள் திட்டமிட்டபடி 18 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், DRAM மெமரி சிப் சர்வதேச விநியோகம் 3 முதல் 4 சதவீதம் வரை பாதிக்கப்படும். NAND மெமரி சிப் விநியோகம் 2-ல் இருந்து 3% வரை பாதிக்கப்படும் என்றும், இது மேலும் சிப்களின் விலையுயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் கணிக்கிறார்.

தென் கொரிய அரசு அதிகாரிகளும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தென் கொரிய ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறது. தென் கொரிய ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே கால்வாசி பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த 18 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தென் கொரியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தென் கொரிய மத்திய வங்கியும் அஞ்சுகிறது. மிக மோசமான பாதிப்புகளுக்குக் கூட வழிவகுக்கும் என்றும் கணிக்கிறது.

இந்தப் போராட்டம் நடந்தால் 30 ட்ரில்லியன் தென் கொரிய நாணயம், அதாவது 19.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் தயாரிப்பு ஸ்தம்பிக்கும். கூடவே, அடுத்த சில வாரங்களுக்கு உற்பத்தியில் சுணக்கமும் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், தென் கொரிய அரசு தாமாக முன்வந்து சாம்சங் நிறுவனம் - அதன் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை மத்தியஸ்தம் செய்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.