惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
C
Check Point Blog
GbyAI
GbyAI
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Hugging Face - Blog
Hugging Face - Blog
Vercel News
Vercel News
博客园 - 【当耐特】
美团技术团队
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜபல்பூர் படகு விபத்தில் பரிதாபம்: திருச்சியை சேர்ந்த 5 பே...
2026-05-02 · via hindutamil

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் கவிழ்ந்த சுற்றுலா படகு. (உள்படம்) விபத்தில் உயிரிழந்த காமராஜ், கார்குழலி.படம்: பிடிஐ

Updated on

2 min read

ஜபல்பூர்/ திருச்சி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்​டத்​தில் நர்மதை ஆற்​றின் குறுக்கே பார்கி அணை கட்​டப்​பட்​டுள்​ளது. இந்த அணை​யில் சுற்​றுலா பயணி​களுக்​காக படகு சவாரி இயக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் நேற்று முன்தினம் மாலை சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென காற்று பலமாக வீசியதால், படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. சுற்றுலா பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.

இதில் 15 பேர் நீந்திச் சென்று தப்பித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாலையில் இருள் சூழ்ந்தால், மீட்புப் பணி சவாலாக இருந்தது. நேற்று காலை வரை 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவர். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் காமராஜ்(39).

இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே கமேரியாவில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்குழலி. இவர்களது மகன்கள் புவிதரன்(10), தமிழ்வேந்தன்(6).

சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரத்தில் வசிக்கும் கார்குழலியின் அண்ணன் பரிமேலழகன், தனது மனைவி சவுபாக்கியம், மகன் மயூரன், மகள் இனியா(12) உடன் ஜபல்பூர் சென்றிருந்தார். அவர்களை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவாக காமராஜ் அழைத்து சென்றுள்ளார். ஏப்.30-ம் தேதி மாலை 4 மணி அளவில் பார்கி அணைக்கு படகு சவாரி சென்றபோதுதான் அனைவரும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, இளைய மகன் தமிழ்வேந்தன், சவுபாக்கியம், அவரது மகன் மயூரன் உட்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காமராஜின் மூத்த மகன் புவிதரன், உறவினர் இனியா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் உடல்கள் நேற்று இரவு வரை கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட கார்குழலி, சவுபாக்கியம், மயூரன் உடல்கள் இன்று மாலைக்குள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.

அணைத்த நிலையில் தாய்-சேய் சடலம்: உயிரிழந்தவர்களில் ஒரு பெண் தனது 4 வயது மகனை கட்டி அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்டார். இது காண்போரின் மனதை உருக்கியது. மகனைக் காப்பாற்ற அவர் தண்ணீரில் போராடியுள்ளார் எனத் தெரிகிறது. இவரது கணவரும், மகளும் தப்பி விட்டனர். இவர்கள் டெல்லியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என கூறப்படுகிறது.

படகு விபத்து குறித்து அதில் பயணம் செய்த ஒருவர் கூறியபோது, ‘‘திடீரென காற்று பலமாக வீசியதில் படகு தத்தளித்தது. உள்ளே தண்ணீர் புகுந்ததால் நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது. கண்மூடி திறப்பதற்குள், எனது மனைவி, மாமியார், பேரன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர்’’ என சோகத்துடன் கூறினார். விபத்தில் சிக்கி 2 மணி நேரமாகப் போராடிய சையத் ரியாஸ் உசைன் என்பவரை மீட்புக் குழுவினர் மீட்டனர். தனது கண் முன்பே பலர் உயிரிழந்து மிதந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என்று அவர் அழுதபடி கூறினார்.