惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
M
MIT News - Artificial intelligence
美团技术团队
aimingoo的专栏
aimingoo的专栏
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Microsoft Security Blog
Microsoft Security Blog
Last Week in AI
Last Week in AI
The GitHub Blog
The GitHub Blog
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
Martin Fowler
Martin Fowler
B
Blog RSS Feed
月光博客
月光博客
量子位
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
Y
Y Combinator Blog
B
Blog
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தெருநாய்கள் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? - உச்ச நீதிமன்...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

இந்தியாவின் அநேக தெருக்களிலும் பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக தெருநாய்கள் உருவாகியுள்ளன. சமீப காலங்களாக இது பல குடும்பங்களுக்குப் பெரும் கவலையாகவும், அச்சமாகவும் மாறியுள்ளது.

பிரச்சினையின் தொடக்கம்: பொது இடங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்ததே இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும் அடிப்படையாகும். வீதிகளில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள் மற்றும் முறையான நகராட்சி உள்கட்டமைப்பு இல்லாத காரணத்தால் நாய்களின் பெருக்கம் அபாயகரமான விகிதத்தை எட்டியுள்ளது.

வெறுமனே நாய்கள் நடமாடுவதுடன் நிற்காமல், வெறிநாய்க்கடி எனப்படும் ரேபிஸ் நோய் பாதித்த நாய்களாலும், சில ஆக்ரோஷமான நாய் கூட்டங்களாலும் பொதுமக்கள், குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தனர். தங்களின் அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி பொதுமக்கள் தரப்பிலும், நாய்களைக் கொடூரமாகக் கையாள்வதைத் தடுக்கக் கோரி விலங்கு நல அமைப்புகளின் தரப்பிலும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டது.

குடிமக்களின் வாழ்வுரிமைக்கு முன்னுரிமை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமையை வழங்கியுள்ளது. இந்த வாழ்வுரிமையின் மிக முக்கியப் பகுதி, பொது இடங்களில் எந்தவித உடல் ரீதியான பாதிப்போ அல்லது உயிருக்கு ஆபத்தோ ஏற்பட்டுவிடுமோ என்ற தொடர்ச்சியான அச்சம் இல்லாமல் நடமாடுவதாகும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை நாய் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுவித்து, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அரசின் முதன்மைக் கடமையாகும். தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது கருத்தடை செய்யப்பட்ட நாய்களாக இருந்தாலும் கூட, மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இத்தகைய முக்கிய பொது இடங்களில் அவற்றை மீண்டும் கொண்டு வந்து விடக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மனித உயிருக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் நிலவும்போது, அரசு வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற கடுமையான பார்வையை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

கருணைக்கொலை: கடந்த மே 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் சில முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் மிக முக்கியமான மற்றும் விவாதத்திற்குள்ளான பகுதி, ஆபத்தான நாய்களுக்குக் கருணைக்கொலை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியாகும். இது தெருநாய்களைக் கண்டமேனிக்குக் கொல்லவோ அல்லது பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி விலங்குகளைத் துன்புறுத்தவோ வழங்கப்பட்ட தடையற்ற அதிகாரம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வது மிக முக்கியம்.

வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத அளவுக்கு நோயுற்ற அல்லது மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்ட மிக ஆக்ரோஷமான நாய்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அதுவும், தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவ நிபுணர்கள் அந்த நாய்களை முறையாகப் பரிசோதித்து, சான்றளித்த பிறகே, உள்ளாட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சட்ட விதிகளின்படி இந்த இறுதிக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது, அதே நேரத்தில் விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தின் விதிகளும் காக்கப்படுகின்றன.

நிரந்தரத் தீர்வு... தெருநாய்கள் பிரச்சினைக்குக் கருணைக்கொலை என்பது ஒரு தற்காலிக மற்றும் அவசரக்காலத் தீர்வு மட்டுமே. இதன் நிரந்தரத் தீர்வானது நாய்களின் பிறப்பைக் கட்டுப்படுத்துவதிலும், அவற்றுக்கு முறையான தடுப்பூசி போடுவதிலுமே அடங்கியுள்ளது. இதற்காக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையமாவது அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மையங்களில் தகுந்த அறுவை சிகிச்சை வசதிகளும், பயிற்சி பெற்ற பணியாளர்களும் இருக்க வேண்டும். மேலும், நாய் கடியால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் மற்றும் மருந்து இருப்புகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.