惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
Engineering at Meta
Engineering at Meta
Stack Overflow Blog
Stack Overflow Blog
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
B
Blog
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
阮一峰的网络日志
阮一峰的网络日志
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
C
Check Point Blog
月光博客
月光博客
L
LangChain Blog
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” - விஜய்க்கு திரையுலக பிர...
டெக்ஸ்டர் · 2026-05-05 · via hindutamil

Updated on: 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் மட்டுமே வசமாகின்றன

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் 

கமல்ஹாசன்: தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.  மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்

சூர்யா: மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். 

கார்த்தி: மனமார்ந்த வாழ்த்துகள், விஜய் சார். மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் இணைந்து ஈட்டியுள்ள இந்த வெற்றி உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது. நமது மக்களுக்கான உங்கள் கனவுகளையும் தொலைநோக்குத் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணையாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

சிவகார்த்திகேயன்: போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

ஏ.ஆர்.ரஹ்மான்: அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும். சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்

மகேஷ்பாபு: புதிய மைல்கற்களைப் படைத்து, பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இன்று கிடைத்துள்ள இந்த வெற்றி, மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி தமிழகத்திற்கு அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நானி: முதலில் சந்தேகிக்கப்பட்டு, பின் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது. இது எங்கள் வீட்டில் (மாநிலத்தில்) நடந்தது, இப்போது எங்கள் அண்டை வீட்டிலும் நடக்கிறது. அடிமட்டத்திலிருந்து ஒருவர் வெற்றி பெறுவது என்பது எப்போதும் ஒரு முழுமையான சினிமா போன்றது (அல்லது ஒரு முழுமையான அரசியல் என்று சொல்லலாமா?) தங்கள் முடிவைத் தெளிவாகத் தெரிவித்துள்ள தமிழக மக்களுக்கு, இதன் மூலம் நல்ல பல நன்மைகள் தொடரும் என நம்புகிறேன்.

சிரஞ்சீவி: அன்புள்ள விஜய், உங்களது முதல் தேர்தலில் கிடைத்துள்ள இந்த சிறப்பான மற்றும் தகுதியான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தளராத ஆர்வத்தோடும் நோக்கத்தோடும் நீங்கள் தொடர்ந்து மக்களை ஊக்கப்படுத்தவும், வழிநடத்தவும், சேவை செய்யவும் வேண்டுகிறேன். தமிழகத்திற்கும் அதன் மக்களுக்கும் நீங்கள் ஆற்றவிருக்கும் பொதுப்பணிக்கு எனது மேலான வாழ்த்துகள்.

தனுஷ்: களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்