惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
Y
Y Combinator Blog
月光博客
月光博客
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Proofpoint News Feed
小众软件
小众软件
H
Help Net Security
Last Week in AI
Last Week in AI
B
Blog RSS Feed
宝玉的分享
宝玉的分享
N
Netflix TechBlog - Medium
博客园 - 叶小钗
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“திமுக கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இல்லை”...
தீ.பிரசன்ன வெங்கடேஷ் · 2026-06-28 · via hindutamil

Updated on: 

திருச்சி: “தேர்தலுக்கு முன் என்னை வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் முயற்சித்தனர். அதற்கு நான் இணங்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னைப் போன்றவர்களுக்கு இல்லை” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ஜூலை 5-ம் தேதி விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. பேராசிரியர் சொக்கலிங்கத்துக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்க உள்ளோம். எனது பிறந்தநாளான ஆகஸ்ட் 17 தமிழர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அதே நாளில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடத்த உள்ளோம். மாநாடு எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும்.

அரசு பொறுப்பில் ஜோதிடரை நியமிக்கக்கூடாது, தூய்மை பணியாளர்கள் தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்ற தமிழக முதல்வர், அவற்றை கைவிடுவதாக அறிவித்தார். தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகள், ஆலோசனைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் முதல்வரின் பாங்கு பாராட்டுக்குரியது.

கடந்த ஆட்சி நிர்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுவதாக நம்புகிறேன்; வரவேற்கிறேன்.

நாங்கள் 35 ஆண்டுகளாக தமிழ் தேசியம் பற்றி பேசி வருகிறோம். தமிழ் தேசியம், சாதி ஒழிப்பு, பாட்டாளி வர்க்க விடுதலை, மகளிர் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவை விசிகவின் ஐம்பெரும் முழக்கங்கள். ஏராளமான தமிழ் தேசிய கருத்தரங்கங்கள், மாநாடுகளை நடத்தி உள்ளோம். அடுத்த பாய்ச்சலாகத்தான் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு முன்னெடுக்கிறோம்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர். அந்தப் பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல. ஆகவே, அந்த பொறுப்பை முதல்வர் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு வழங்கி உள்ளார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறது. படிப்படியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வரையறுக்க வேண்டும். காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது அவருடைய கொள்கைகளை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேர்தலுக்கு முன் என்னை வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் முயற்சித்தனர். அதற்கு நான் இணங்கவில்லை. திமுக கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்போடு இயங்கினோம். தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னைப் போன்றவர்களுக்கு இல்லை. அந்த வலிமை எனக்கு இல்லை. கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறுவது குறித்து திமுக தலைமை தான் பதில் சொல்ல வேண்டும். மதிமுகவின் 2 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முதல்வர் விஜய் தெரிவித்ததாக வைகோ கூறியது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.