惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
Y
Y Combinator Blog
博客园 - Franky
D
Docker
B
Blog RSS Feed
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
宝玉的分享
宝玉的分享
S
SegmentFault 最新的问题
GbyAI
GbyAI
Recent Announcements
Recent Announcements
Martin Fowler
Martin Fowler
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
MyScale Blog
MyScale Blog
B
Blog
H
Help Net Security
Microsoft Security Blog
Microsoft Security Blog
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
The Cloudflare Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் கூ...
செய்திப்பிரிவு · 2026-05-25 · via hindutamil

Updated on: 

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தவெகவில் இணைந்தனர். அவர்களது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

அப்போது பேரவைத் தலைவர் பிரபாகர் கூறுகையில், “ஓர் உறுப்பினர் பதவி விலகும்போது காரணம் குறிப்பிடத் தேவையில்லை. உறுப்பினர் விரும்பி ராஜினாமா கடிதம் கொடுக்கும்போது, அந்த கடிதம் முறையாக இருக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே எனது பணி. அதை சரியாக செய்துள்ளேன்.

பேரவை விதி 21-ன்படி, பதவி விலக விரும்பும் உறுப்பினர், பேரவைத் தலைவருக்கு தனது எண்ணத்தை கைப்பட எழுதி தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளதால், ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதங்கள் எனது பரிசீலனையில் உள்ளன. ஆய்வு செய்து வருகிறேன். இதற்கு காலக்கெடு இல்லை. ஆனால், அவகாசம் தேவை. விதிகளின்படி நிச்சயமாக ஆய்வு செய்து முடிவெடுப்பேன்” என்றார்.

ராஜினாமா ஏற்கப்பட்டதை தொடர்ந்து, 3 பேரும் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் சந்தித்து தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு தவெக உறுப்பினர் அட்டையும் உடனே வழங்கப்பட்டது.

இதற்கிடையே, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து, பழனிசாமி அணியில் இன்று இணைந்தனர். இதன்மூலம், பழனிசாமி அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. சி.வி.சண்முகம் அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது.

பழனிசாமி அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பேரவைத் தலைவரை இன்று சந்தித்து, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர்.

ஏற்கெனவே முதல்வர் விஜய் வெற்றி பெற்று, ராஜினாமா செய்ததால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகின. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்), எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் கடந்த 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.

தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேர் வெற்றி பெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பழனிசாமி தலைமையில் 22 பேர், சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் என இரு அணிகளாக பிரிந்தனர்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு 13-ம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவை அதிமுக தலைவர், கொறடா நியமிக்கப்படாத நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள், விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறியதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.