


























Updated on
:
1 min read
அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி ‘பில்லா’ படம் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, பிரபு, ரகுமான், நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பில்லா’. 2007-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருக்கேற்றப்பட்டு வெளியாகவுள்ளது. ‘பில்லா’ மறுவெளியீட்டினை எம்.டி.பி ஆண்டனி தாஸ் வழங்குகிறார். தற்போதைய பார்வையாளர்களுக்காக 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி தொழில்நுட்பத்தில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘பில்லா’ அமைந்தது. அப்படம் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.
ஏப்ரல் 24-ம் தேதி அன்று அஜித் நடித்த ‘அமர்க்களம்’ மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த வாரமே ‘பில்லா’ மறுவெளியீடு ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。