惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
Docker
H
Help Net Security
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
C
Check Point Blog
S
SegmentFault 最新的问题
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
B
Blog RSS Feed
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
腾讯CDC
美团技术团队
I
InfoQ
Blog — PlanetScale
Blog — PlanetScale

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காகிசோ ரபா​டா, சாய் சுதர்சன் அபாரம்: குஜராத் அணிக்கு 4வது...
2026-04-27 · via hindutamil

Updated on

5 min read

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்​கம் அதிர்ச்​சி​யாக இருந்​தது. முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் ஒரு ரன் மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். காகிசோ ரபாடா வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்​சன் 2 பவுண்டரிகளை விரட்​டி​னார். இதனால் இந்த ஓவரில் 2 பவுண்​டரி​கள் விரட்​டப்​பட்​டன. முகமது சிராஜ் வீசிய 3-வது ஓவரில் ருது​ராஜ் கெய்க்​வாட் தொடர்ச்​சி​யாக 2 பவுண்டரிகளை விரட்​டி​னார்.

காகிசோ ரபாடா வீசிய 4-வது ஓவரின் 3-வது பந்​தில் சஞ்சு சாம்​சன் ஆட்​ட​மிழந்​தார். ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே ஷாட் லெந்​தில் வீசிய பந்தை சாம்​சன் அடிக்க முயன்ற போது பந்து மட்டை விளிம்​பில் பட்டு விக்​கெட் கீப்​பர் ஜாஸ் பட்​லரிடம் கேட்ச் ஆனது. 15 பந்​துகளை சந்​தித்த சஞ்சு சாம்​சன் 2 பவுண்​டரி​களு​டன் 11 ரன்​கள் சேர்த்​தார்.

முதல் விக்​கெட்​டுக்கு சஞ்சு சாம்​சன், கெய்க்​வாட் ஜோடி 21 ரன்​கள் சேர்த்​தது. இதையடு​தது களமிறங்​கிய உர்​வில் படேல் அவசரக​தி​யில் விளை​யாடி​னார். ஆஃ ப் ஸ்டெம்​புக்கு வெளியே ரபாடா வீசிய பந்தை உர்​வில் படேல் விளாச முயன்ற போது மிட் ஆன் திசையில் நின்ற ஜேசன் ஹோல்​டரிடம் கேட்ச் ஆனது. உர்​வில் படேல் 3 பந்​துகளில் 4 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து இம்​பாக்ட் பிளேயர் விதி​யின் கீழ் களமிறங்​கிய சர்ஃப​ராஸ் கான் சந்​தித்த முதல் பந்​திலேயே ரன் ஏதும் எடு​க்​காமல் நடையை கட்​டி​னார். முகமது சிராஜ் வீசிய பந்தை சர்ஃப​ராஸ் கான் ஸ்கொயர் லெக் திசையில் நோக்கி சிக்​ஸர் விளாசுவதற்​காக மட்​டையை சுழற்​றி​னார். ஆனால் பந்து அவருக்கு பின்​புறம் அதிக உயரத்​தில் சென்​றபடி ஜாஸ் பட்​லரிடம் கேட்ச் ஆனது.

இதனால் சிஎஸ்கே அணி 4.4 ஓவர்​களில் 26 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்து நெருக்​கடி​யான நிலைக்கு தள்​ளப்​பட்​டது. இதையடுத்து டெவால்ட் பிரே​விஸ் களமிறங்க பவர்​பிளே​வில் சிஎஸ்கே அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 28 ரன்​கள் சேர்த்​தது. நிதான​மாக விளை​யாடிய டெவால்ட் பிரே​விஸ் 9 பந்​துகளில் 2 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் வீசிய சுழற் பந்​து​வீச்​சில் தனது விக்​கெட்டை பறி​கொடுத்​தார்.

மானவ் சுதார் பந்தை டெ​வால்ட் பிரே​விஸ் லாங் ஆன் திசையை நோக்கி சிக்​ஸருக்கு விளாச முயன்​றார். ஆனால் பந்து சரி​யாக மட்​டை​யில் சிக்​காத நிலை​யில் கவர் திசை​யில் ஷுப்​மன் கில்​லிடம் கேட்ச் ஆனது. அப்​போது ஸ்கோர் 8.2 ஓவர்​களில் 37 ஆக இருந்​தது. இதையடுத்து ஷிவம் துபே களமிறங்க 10 ஓவர்​களில் சிஎஸ்கே அணி 43 ரன்​கள் சேர்த்​தது. அர்​ஷத் கான் வீசிய 13-வது ஓவரில் டீப் மிட் விக்​கெட் மற்​றும் டீப் ஸ்கொயர் லெக் திசை​யில் தலா ஒரு சிக்​ஸரை பறக்​க​விட்டு அசத்​தி​னார் ருது​ராஜ் கெய்க்​வாட்.

தொடர்ந்து ஜேசன் ஹோல்​டர் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தை லெக் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார் ருது​ராஜ் கெய்க்​வாட். ரஷித் கான் வீசிய 15-வது ஓவரில் ஷிவம் துபே தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் விளாசி​னார். ருது​ராஜ் கெய்க்​வாட் தனது பங்​குக்கு ஒரு பவுண்​டரி விரட்ட இந்த ஓவரில் 21 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. சீராக ரன்​கள் சேர்த்த ஷிவம் துபே 17 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 22 ரன்​கள் எடுத்த நிலை​யில் அர்​ஷத் கான் பந்​தில் போல்​டா​னார்.

இதையடுத்து களமிறங்​கிய கார்த்​திக் சர்மா மட்​டையை சுழற்​றி​னார். மறு​புறம் நிதா​னாக விளை​யாடிய ருது​ராஜ் கெய்க்​வாட் 49 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார். முகமது சிராஜ் வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தை ருது​ராஜ் கெய்க்​வாட் மிட்விக்​கெட் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார்.காகிசோ ரபாடா வீசிய 18-வது ஓவரில் தொடர்ச்​சி​யாக 2 பவுண்​டரி​கள் அடித்த கார்த்திக் சர்மா இந்த ஓவரின் 5-வது பந்​தில் தேர்​டுமேன் திசை​யில் நின்ற ஜேசன் ஹோல்​டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

கார்த்​திக் சர்மா 9 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 15 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஜேமி ஓவர்​டன் அர்​ஷத் கான் வீசிய 19-வது ஓவரில் 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் விளாசி​னார். ஆனால் இதே ஓவரின் கடைசி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். ஜேமி ஓவர்​டன் 6 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 18 ரன்​கள் சேர்த்​தார்.

மானவ் சுதார் வீசிய கடைசி ஓவரில் ருது​ராஜ் கெய்க்​வாட் 3 பவுண்​டரி​களை விரட்ட 20 ஓவர்​கள் முடி​வில் சிஎஸ்கே அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 158 ரன்​கள் எடுத்​தது. ருது​ராஜ் கெய்க்​வாட் 60 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 74 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். குஜ​ராத் அணி தரப்​பில் காகிசோ ரபாடா 3, அர்​ஷத் கான் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். மானவ் சுதார், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

159 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 16.4 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 162 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தொடக்க வீர​ரான சாய் சுதர்​சன் 46 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி​னார். ஜாஸ் பட்​லர் 30 பந்​துகளில், 4 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 39 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

முன்​னதாக ஷுப்​மன் கில் 23 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 33 ரன்​கள் எடுத்த நிலை​யில் நூர் அகமது பந்​தில் ஸ்டெம்​பிங்க் ஆனார். 8 விக்​கெட்​கள் வித்​தியாசத்​தில் வெற்றி பெற்ற குஜ​ராத் டைட்ன்ஸ் அணிக்கு இது 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. ஆட்ட நாயக​னாக காகிசோ ரபாடா தேர்​வா​னார். சிஎஸ்கே அணிக்கு இது 5-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி 8 ஆட்​டங்​களில் விளையாடி 3 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 6-வது இடத்​தில் உள்​ளது.

31 ஆயிரம் ரசிகர்​கள்

ஐபிஎல் தொடரில் நேற்று சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே - குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்தை காண்​ப​தற்​காக மைதானத்​தில் 31,506 ரசிகர்​கள் குவிந்​திருந்​தனர்.

பவர்​பிளே​வில் குறைவான ரன்கள்

ஐபிஎல் தொடரில் நேற்று குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி பவர்​பிளே​வில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 28 ரன்​கள் சேர்த்​தது. இது நடப்பு சீசனில் பவர்​பிளே​வில் ஓர் அணி எடுத்த 2-வது குறைந்​த​பட்ச ரன்​கள் இது​வாகும். இதற்கு முன்​னர் லக்னோ அணிக்கு எதி​ராக ஹைத​ரா​பாத் அணி பவர்​பிளே​வில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 22 ரன்​கள் எடுத்​திருந்​தது.

சஞ்சு சாம்​சன் 5 ஆயிரம் ரன்​கள்

ஐபிஎல் தொடரில் நேற்று குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் 11 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். அவர், 3 ரன்​களை எடுத்​திருந்த போது ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்​களை கடந்​தார். 185 போட்​டிகளில் விளை​யாடி இந்த மைல்​கல் சாதனையை அவர் எட்​டி​யுள்​ளார்.

5 ஆயிரம் ரன்​களை சஞ்சு சாம்​சன் 3,555 பந்​துகளில் எடுத்​துள்​ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்​துகளில் 5 ஆயிரம் ரன்​களை குவித்​தவர்​களின் பட்​டியலில் சாம்​சன் 3-வது இடத்தை பிடித்​தார். இந்த வகை​யில் டி வில்​லியர்ஸ் (3,288 பந்​துகள்) முதலிடத்​தி​லும், டேவிட் வார்​னர் (3,554) 2-வது இடத்​தி​லும் உள்​ளனர்.

சிக்​ஸரில் சதம்

ஐபிஎல் தொடரில் குஜ​ராத் அணிக்கு எதி​ராக நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 4 சிக்​ஸர்​கள் விளாசி​னார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்​காக 100 சிக்​ஸர்​களை விளாசி​ய​வர்​களின் பட்​டி​யலில் ருது​ராஜ் கெய்க்​வாட் இடம் பிடித்​தார். இந்த வகை சாதனை​யில் தோனி 234 சிக்​ஸர்​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். ரெய்னா (180) 2-வது இடத்​தி​லும், ஷிவம் துபே (105) 3-வது இடத்​தி​லும் உள்​ளனர். இவர்​களு​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 101 சிக்​ஸர்​களு​டன் 4-வது வீர​ராக இணைந்​துள்​ளார்.

மந்​த​மான அரை சதம்

குஜ​ராத் அணிக்கு எதி​ராக நேற் று நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் ருது​ராஜ் கெய்க்​வாட் 49 பந்​துகளில் அரை சதம் அடித்​தார். இதன் மூலம் அவர், சிஎஸ்கே அணிக்​காக மந்​த​மாக விளை​யாடி அரை சதம் அடித்​தவர்​களின் பட்​டியலில் 6-வது இடத்தை பிடித்​தார். இந்த வகை​யில் பஞ்​சாப் அணிக்கு எதி​ராக 2010-ல் பார்த்​தீவ் படேல் 53 பந்​துகளில் அரை சதம் அடித்து முதலிடத்​தில் உள்​ளார்.

8 ஓவர்​களில் 108 குஜ​ராத் அணிக்கு எதி​ராக நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 12 ஓவர்​களில் 50 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது. இதனால் சிஎஸ்கே அணி 100 ரன்​களை எட்​டு​வதே கடினம் என்று கூறப்​பட்​டது. ஆனால் கடைசி 8 ஓவர்​களில் 108 ரன்​கள்​ குவித்​தது. ஜேமி ஓவர்​டன்​, ருது​ராஜ் கெய்க்​வாட்​ ஆகியோர்​ இறு​திக்​கட்​ட ஓவர்​களில்​ அதிரடி​யாக ​விளை​யாடி​தால்​ சற்​று கவுரவமான ஸ்கோரை கொடுக்க முடிந்தது.

ஸ்கோர் போர்டு

சிஎஸ்கே

  • சஞ்சு சாம்சன் (சி) பட்லர் (கே) ரபாடா 11

  • ருதுராஜ் கெய்க்வாட் (அவுட் இல்லை) 74

  • உர்வில் படேல் (சி) ஹோல்டர் (பி) ராபாடா 4

  • சர்ஃபராஸ்கான் (சி) பட்லர் (கே) சிராஜ் 0

  • டெவால்ட் பிரேவிஸ் (சி) ஷுப்மன் கில் (பி) சுதார் 2

  • ஷிவம் துபே (பி) அர்ஷத் கான் 22

  • கார்த்திக் சர்மா (சி) ஹோல்டர் (பி) ரபாடா 15

  • ஜேமி ஓவர்டன் (சி) ஷாருக்கான் (பி) அர்ஷத் கான் 18

  • அகீல் ஹோசைன் (அவுட் இல்லை) 0

  • உதிரிகள் 12

  • மொத்தம் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 158

விக்கெட் வீழ்ச்சி: 1-21 (சஞ்சு சாம்சன்), 2-25 (உர்வில் படேல்), 3-26 (சர்ஃபராஸ்கான்), 4-37 (பிரேவிஸ்), 5-96 (ஷிவம் துபே), 6-122 (கார்த்திக் சர்மா), 7-143 (ஜேமி ஓவர்டன்)

பந்துவீச்சு

  • முகமது சிராஜ் 4 0 23 1

  • காகிசோ ரபாடா 4 0 25 3

  • மானவ் சுதார் 3 0 22 1

  • ஜேசன் ஹோல்டர் 4 0 22 0

  • அர்ஷத் கான் 4 0 23 2

  • ரஷித் கான் 1 0 21 0

குஜராத் டைட்டன்ஸ்

  • சாய் சுதர்ஷன் (சி) பிரேவிஸ் (பி) அகீல் ஹொசைன் 87

  • ஷுப்மன் கில் (ஸ்டம்பிங்) சாம்சன் (பி) நூர் அகமது 33

  • ஜாஸ் பட்லர் (அவுட் இல்லை) 39

  • வாஷிங்டன் சுந்தர் (அவுட் இல்லை) 1

  • உதிரிகள் 2

  • மொத்தம் 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162

விக்கெட் வீழ்ச்சி: 58-1(ஷுப்மன் கில்), 155-2 (சாய் சுதர்ஷன்)

பந்துவீச்சு

  • அகீல் ஹோசைன் 3.4-0-46-1

  • அன்ஷுல் கம்போஜ் 3-0-16-0

  • ஜேமி ஓவர்டன் 2-0-28-0

  • குர்ஜப்நீத் சிங் 3-0-36-0

  • நூர் அகமது 4-0-29-1

  • ஷிவம் துபே 1-0-7-0