惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
A
About on SuperTechFans
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
Recent Announcements
Recent Announcements
云风的 BLOG
云风的 BLOG
B
Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
Martin Fowler
Martin Fowler
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
Vercel News
Vercel News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
爱范儿
爱范儿
V
V2EX
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘நீட்' வழக்கில் கைதானவருக்கு ரூ.1,500 கோடி சொத்து: 8 ஏக்க...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

லத்தூர்: நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கில் கைதான லத்​தூர் வேதியியல் பயிற்சி மைய நிறு​வனருக்கு ரூ.1,500 கோடி சொத்துகள் இருப்​பதும் 8 ஏக்​கர் நிலத்​தில் அவர் பள்​ளி, கல்​லூரி கட்டி வரு​வதும் அம்​பல​மாகி​யுள்​ளது.

வினாத்​தாள் கசிவு காரண​மாக, கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்ற நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக மகா​ராஷ்டிர மாநிலம் லத்​தூரை சேர்ந்த ரேணு​காய் வேதி​யியல் பயிற்சி மைய நிறு​வனர் சிவ​ராஜ் ரகு​நாத் மோட்​டே​கான்​கர் என்​பவரை சிபிஐ கடந்த ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்தது.

இது தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் கூறுகை​யில், “தேசிய தேர்வு முகமை​யுடன் தொடர்​புடைய வேதி​யியல் விரிவுரை​யாளர் பி.​வி. குல்​கர்​னி​யுடன் மோட்​டே​கான்​கர் நெருங்​கிய தொடர்​பில் இருந்துள்​ளார். கசிந்த நீட் வினாத்​தாள் மோட்​டே​கான்​கரின் செல்போனில் இருந்​தது. தேர்​வுக்கு 10 நாட்​களுக்கு முன்பே இவர் வினாத் தாளை பெற்​றுள்​ளார். வினாத்​தாளை கசி​ய​விட்ட கும்பலின் தீவிர உறுப்​பின​ராக இவர் செயல்​பட்​டுள்​ளார்” என்றனர்.

மோட்​டே​கான்​கர் சுமார் 25 ஆண்​டு​களுக்கு முன், ஒரு பகு​திநேர ஆசிரிய​ராக வாழ்க்​கையை தொடங்​கி​யுள்​ளார். 1999- 2000 கால​கட்​டத்​தில், லத்​தூரில் ஒரு சிறிய கடை​யில் வெறும் 10 மாணவர்களை கொண்டு அவர் ‘ரேணு​காய் வேதி​யியல் வகுப்புகள்' (ஆர்​சிசி) என்ற பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். காலப் ​போக்​கில், இந்த நிறு​வனம் மிக வேக​மாக விரிவடைந்​தது. தற்​போது லத்​தூர், நாந்​தேட், சத்​ரபதி சம்​பாஜிநகர், புனே, அகோலா, நாசிக், சோலாப்​பூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இது செயல்​பட்டு வரு​கிறது.

இந்​த நிறு​வனத்​தின் மொத்த சொத்து மதிப்பு தற்​போது சுமார் ரூ.1,500 கோடி​யாக இருக்​கும் என கருதப்​படு​கிறது. 40,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் இந்த நிறு​வனத்​தில் பயின்று வரு​வ​தாக கூறப்படுகிறது. இந்​நிலை​யில் லத்​தூர் அருகே கோபே​கான் ஷிவார் பகு​தி​யில் 8 ஏக்​கர் நிலத்​தில் இவர் பள்​ளி, கல்​லூரி கட்டி வரு​வது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

அந்த நிலத்​தில் இரண்​டரை ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்​மாண்ட பல அடுக்​குக் கட்​டிடம் உரு​வாகி வரு​வதும் அதன் கட்​டு​மானப் பணிகள் ஏறக்​குறைய நிறைவடை​யும் நிலை​யில் இருப்​பதும் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இது மோட்​டே​கான்​கரின் வரு​மான ஆதா​ரம் மற்​றும் நிதி ஆதா​ரங்​கள் குறித்த கேள்வி​களை எழுப்பியுள்​ளது.

கடந்த 2025-ல் இவரது பயிற்சி மையங்​களில் படித்த 19 மாணவர்கள் நாடு முழு​வதும் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​களில் அட்மிஷன் பெற்​றுள்ள நிலை​யில் இது தொடர்​பாக​வும் சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கில் வேதி​யியல் விரிவுரை​யாளர் பி.​வி.குல்​கர்​னி, உயி​ரியல் விரிவுரை​யாளர் மனிஷா மந்​தாரே உள்​ளிட்ட 10 பேரை சிபிஐ இது​வரை கைது செய்​துள்​ளது.