惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
雷峰网
雷峰网
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
博客园_首页
小众软件
小众软件
The Cloudflare Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஸ்பெயினுக்கு அதிர்ச்சி; பெல்ஜியம் - எகிப்து ஆட்டம் டிரா |...
வேட்டையன் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் குரூப் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம்பெறுள்ள ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடின. இரண்டு அணிகளுக்கும் முதல் ஆட்டம் சவாலாக அமைந்தது.

ஸ்பெயின் vs கேப் வெர்டே: இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு இந்த தொடரில் முதல் முறையாக விளையாடும் ஆப்பிரிக்க கண்டத்தின் ‘கேப் வெர்டே’ அணி உடன் ஸ்பெயின் விளையாடியது. எப்படியும் ஆட்டம் ஒன்சைடாக இருக்கும், ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தம் என்றெல்லாம் உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனால், நடந்ததோ வேறு கதை.

அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் கோல் முயற்சி அனைத்தையும் துல்லியமாக தடுத்தார் கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா. அவருக்கு அணியின் தடுப்பாட்ட வீரர்கள் உதவினர். இதன் மூலம் இப்போது ‘டாக் ஆப் தி வேர்ல்ட்’ ஆகியுள்ளார் 40 வயதான வோசின்ஹா.

அதன் விளைவு ஸ்பெயின் அணி ஒரே ஒரு கோல் கூட இந்த ஆட்டத்தில் பதிவு செய்யவில்லை. ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்தது. இது ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்தது. நிச்சயம் உருகுவே, சவுதி அரேபியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் மீண்டு வர முயற்சிக்கும். இந்த ஆட்டத்தில் 8.5 என்ற பிளேயர் ரேட்டிங்கை வோசின்ஹா பெற்றார்.

பெல்ஜியம் vs எகிப்து: குரூப்-ஜி பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. 2018 தொடரில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது பெல்ஜியம். இருப்பினும் கடந்த முறை குரூப் சுற்றோடு வெளியேறியது. மறுபக்கம் முகமது சாலா தலைமையிலான எகிப்து அணி.

நடப்பு தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கிய 20-வது நிமிடத்தில் முதலில் கோல் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தியது எகிப்து. சாலா கொடுத்த அசிஸ்ட்டை பயன்படுத்தி பந்தை வலைக்குள் நுழைத்தார் அஷூர். இரண்டு அணிகளும் ஆட்ட நேரத்தில் பந்தை சம அளவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இதன் பின்னர் இரண்டாவது பாதியில் எகிப்து அணியை தவறு செய்ய வைத்தது பெல்ஜியம். அட்டாக்கிங் ஆட்டம் மூலம் எகிப்து வீரர்களை ஆட்டம் காண செய்தனர் பெல்ஜியம் வீரர்கள். அதன் பலனாக 66-வது நிமிடத்தில் சுய கோல் கொடுத்தார் எகிப்து அணியின் முகமது ஹானி.

இதன் பின்னர் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

சவுதி அரேபியா vs உருகுவே: குரூப்-ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் 1-1 என சமனில் முடிந்தது. இந்த ஆட்டத்தின் முதல் பாதி முழுவதும் உருகுவே ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் 41-வது நிமிடத்தில் சவுதி அணி கோல் பதிவு செய்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் உருகுவே அணி பதில் கோல் பதிவு செய்தது. மேக்ஸி அராயோ 80-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். இந்த ஆட்டத்தில் சவுதி அணியின் கோல்கீப்பர் முகமது அல்-ஓவைஸ் சிறப்பாக செயல்பட்டார். உருகுவே அணியின் கோல் முயற்சியை அவர் அபாரமாக தடுத்திருந்தார். மொத்தம் 10 ஷாட்களை ஆன்-டார்கெட்டில் உருகுவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான் vs நியூஸிலாந்து: குரூப்-ஜி பிரிவு ஆட்டத்தில் ஈரான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார் நியூஸிலாந்தின் எலிஜா ஜஸ்ட். ஆட்டத்தின் 7 மற்றும் 55-வது நிமிடத்தில் அவர் கோல் பதிவு செய்தார். அதற்கான செட் அப்பை கிறிஸ் வுட் செய்திருந்தார்.

அதற்கான பதில் கோல்களை 32 மற்றும் 64-வது நிமிடத்தில் ஈரான் பதிவு செய்தது. இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது. இந்திய வம்சாவளி வீரர் சர்ப்ரீத் சிங், நியூஸிலாந்து அணிக்காக இந்த ஆட்டத்தில் விளையாடினார்.

ஈரான் வீரர் ரெமின் கோல் பதிவு செய்ய சக அணி வீரருக்கு உதவியதோடு தானும் கோல் பதிவு செய்திருந்தார். முதல் ஆட்டத்துக்கு பிறகு குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம்பெற்றுள்ள எட்டு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன.