

























திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 70 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், மார்க்ஸிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் கடும் போட்டியை அளித்து வருகிறது.
காலை 9.30 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 70 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 65 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட் 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。