惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 聂微东
博客园 - 【当耐特】
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
C
Check Point Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
Y
Y Combinator Blog
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
月光博客
月光博客
Vercel News
Vercel News
V
V2EX
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
A
About on SuperTechFans
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
腾讯CDC
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அல்வா நகரம் யாருக்கு இனிக்கும், கசக்கும்? - நெல்லை தொகுதி...
செய்திப்பிரிவு · 2026-04-16 · via hindutamil

Updated on:

திருநெல்வேலி: அல்வா நகரான திருநெல்வேலியில் வெற்றி பெறுவதற்காக முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய், நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என முக்கிய தலைவர்கள் பலரும் இத் தொகுதியில் ஆதரவு திரட்டியிருக்கும் நிலையில் 5 முனை போட்டியே தற்போதுவரை நிலவுகிறது.

கங்கைகொண்டான் சிப்காட், பேட்டை தொழிற்பேட்டை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை இத் தொகுதியில் இருக்கின்றன.

பட்டியலினத்தவர் பெரும் பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில் பிள்ளைமார், முக்குலத்தோர், யாதவர், நாடார், இஸ்லாமியர் கணிசமாகவும் மற்றும் பல்வேறு சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர். காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்கிறது.

மாவட்டத்தின் 2-வது பெரியகுளமான மானூர் குளத்துக்கு சிற்றாற்றில் இருந்து மட்டுமின்றி, தாமிரபரணியில் இருந்து பம்பிங் முறையில் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பேட்டை அரசு கூட்டுறவு நூற்பாலை கால் நூற்றாண்டு காலமாக மூடியிருக்கிறது.

20 வேட்பாளர்கள் போட்டி

இத்தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 1977 முதல் 1986 வரை தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வெற்றிபெற்றிருந்தாலும், 1989 முதல் 2016 வரை திமுகவும், அதிமுகவும் மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றிருந்தார்.

அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா

அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா

பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் 2001 முதல் 2021 வரை 5 தேர்தல்களில் போட்டியிட்டு 3 முறை வெற்றிபெற்றுள்ளார். தற்போதைய தேர்தலில் இத் தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், திமுக வேட்பாளர் சு. சுப்பிரமணியன், அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா. சத்யா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோரிடையேதான் கடும் போட்டியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல் படுத்தவில்லை என்பதால் அச்சமூகத்தினரிடம் அதிருப்தி உள்ளது. இதனால் அதிமுக வேட்பாளருக்கு பிள்ளைமார் சமுதாயத்தினரின் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரத்தில் முக்குலத்தவர் சமுதாயத்தை சேர்ந்த ஆர்.எஸ். முருகன் தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அச்சமுதாயத்தை சேர்ந்த தச்சை கணேசராஜாவுக்கு கிடைக்கும் வாக்குகள் பிரியும் நிலையுள்ளது. சொந்த ஊர்க்காரர், விவசாயி என்பதெல்லாம் கணேசராஜாவுக்கு கை கொடுக்கும்.

தவெக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன்

தவெக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன்

பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு அச்சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளும், கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளால் கிராமப்புறங்கள் நிறைந்த இத்தொகுதி மக்களின் வாக்குகளை அள்ளலாம் என்று திமுக கணக்கு போட்டுள்ளது.

மேலும் பேட்டை, மானூர் பகுதிகளில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் மொத்தமாக கிடைக்கும் என்று திமுக நம்புகிறது. இத்தொகுதியில் பட்டியலினத்தவர் வாக்குகளை பெறுவதற்கு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன்ஷியாம் கிருஷ்ணசாமி பட்டியலினத்தவர் வாக்குகளை நம்பி களமிறக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குகள் சிதறும் நிலையுள்ளது.

நாதக வேட்பாளர் பா. சத்யா

நாதக வேட்பாளர் பா. சத்யா

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா. சத்யா யாதவர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் 9.80 சதவீத வாக்குகளை இவர் பெற்றிருந்தார். இதனால் இம்முறையும் வாக்குகளை இவர் பிரிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோவுக்கு அதிகளவில் மக்கள் திரண்டனர். இதனால் அக் கட்சி வேட்பாளர் ஆர்.எஸ். முருகனுக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நடுநிலையாளர்கள் யார் பக்கம்?

கடந்த பல தேர்தல்களில் வெற்றி தோல்விக்கான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு. எனவே போட்டி கடுமையாகவே இருக்கும். சாதி, மதம் என்ற நிலைகளை தாண்டி நடப்பு அரசியல் சூழ்நிலைகள், தேர்தல் வாக்குறுதிகள், ஆளும், ஆண்ட கட்சிகளின் செயல்பாடுகள் போன்றவற்றை சீர்தூக்கி பார்த்து வாக்களிக்கும் நடுநிலையாளர்கள் யார் பக்கம் என்பது இத் தொகுதியில் வெற்றிதோல்விக்கு முக்கியமாக இருக்கும்.

அல்வாவுக்கு பெயர் பெற்ற திருநெல்வேலி வாக்காளர்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் யாருக்கெல்லாம் அல்வா தரப்போகிறார்கள். யாரை சட்டப்பேரவைக்கு அனுப்பவுள்ளனர் என்பது இன்னமும் கணிக்க முடியாததாகவே உள்ளது. அல்வா நகரம் எந்த வேட்பாளருக்கு இனிக்கும், எந்த வேட்பாளர்களுக்கு கசக்கும் என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்.

வாக்காளர்கள் விவரம்

• ஆண் - 1,33,571

• பெண் - 1,42,206

• மூன்றாம் பாலினத்தவர் - 80

• மொத்த வாக்காளர்கள் - 2,75,857