惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
G
Google Developers Blog
J
Java Code Geeks
C
Check Point Blog
Last Week in AI
Last Week in AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
Vercel News
Vercel News
The GitHub Blog
The GitHub Blog
L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 司徒正美
IT之家
IT之家
Martin Fowler
Martin Fowler
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
U
Unit 42
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-05-29 · via hindutamil

Updated on: 

சிகரத்தை அடைய சிறகுகள் தேவை யில்லை, சிதறாத கவனமே போதும் என்ற வரிகளுக்கு ஏற்ப எப்போதும் சிந்தித்து செயல்படும் விருச்சிக ராசிக்காரர்களே!

குரு பகவான், ஜூன் 2 முதல் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார். இதுவரை எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி வெளிச்சத்துக்கு வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர் பார்த்த வகையில் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நெடுநாளாக வாங்க நினைத்த எலக்ட் ரானிக் பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும் படி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல நிறுவனத்தில் பணி கிடைக்கும்.

எதிர்பாராத பணவரவு உண்டு. சொந்த ஊர் நிகழ்ச்சி களில் தலைமை தாங்குவீர்கள். அப்பாவின் உடல்நிலை சீராகும். அவரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு மாறுவார்கள். அதற்கு கடன் உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்:

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், கையில் பணம் புரளும். எதிர்காலத்துக்காக சேமிக்கவும் செய்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். தன்னம்பிக் கையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். ஆரோக்கியம் மிகச்சிறப்பாக அமையும்.

`குரு பகவான் 3-ம் இடத்தைப் பார்ப்பதால், புது எண்ணங்கள் மனதில் தோன்றும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கைமாற்றாக கொடுத்த பணம் இப்போது வரும். தங்க ஆபரணங்கள் சேரும். புதிய சொத்து வாங்குவீர்கள். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும்.

குரு பகவான் 5-ம் இடத்தைப் பார்வையிடுவதால், குழந்தை பாக்கியம் கிடைக் கும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் தன - பூர்வ புண்யாதி பதியுமான குருபகவான் தனது நட்சத்தி ரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அரசாங்க வேலைகள் முடிவுக்கு வரும்.

சுகாதிபதியான சனி பகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குரு பகவான் பயணம் செய்வதால் மனக் குழப்பங்கள் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் இடவசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். இளைய சகோதரிக்கு திருமணம் கூடி வரும். புது வாகனத்தில் வலம் வருவீர்கள்.

அஷ்டம - லாபாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் பணிபுரிய வாய்ப்பு அமையும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குரு பகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். பணிச்சுமை அதிகரிக்கும். கையிருப்பு கரையக்கூடும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

வியாபாரம், உத்தியோகம்: வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைப் போட்டு லாபம் ஈட்டுவீர்கள். உங்களின் வியாபார யுக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல் போட்டியாளர்கள் திணறுவார்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். ரியல் எஸ்டேட், ஹோட்டல், கட்டிட உதிரிபாகங்கள், இரும்பு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களைப் பெருமையாகப் பேசும் அளவுக்கு நடந்து கொள்வீர்கள். வேலைச்சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம். கணினி துறையினருக்கு வெளிநாட்டு நிர்வாகத்தில் இருந்து வாய்ப்புகள் வரும். கலைஞர்கள் விமர்சனங்களைக் கடந்து சென்று முன்னேறுவார்கள். மூத்த கலைஞர்களிடம் மனஸ்தாபங்கள் வரக்கூடும். முடிந்த அளவு விட்டுக் கொடுத்துப் போகவும். புது வாய்ப்புகள் தேடி வரும். இந்த குருப் பெயர்ச்சி புது அணுகு முறையால் புதுமை படைக்கும் காலமாக அமையும்.

குரு பகவான் பரிகார தலங்கள்:

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள அரங்குளநாதர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.