惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Recent Announcements
Recent Announcements
Microsoft Security Blog
Microsoft Security Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
J
Java Code Geeks
D
DataBreaches.Net
U
Unit 42
P
Proofpoint News Feed
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Google DeepMind News
Google DeepMind News
博客园 - Franky
博客园_首页
IT之家
IT之家
博客园 - 叶小钗
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் தேர்வு முறையில் அடுத்த ஆண்டு முதல் என்னென்ன மாற்றங்க...
ஆர்.ஷபிமுன்னா · 2026-05-25 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்புக்குப் பின் அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வு முறை மாறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த் தேர்வு முறை தொடர்பான சீர்திருத்தங்கள் மீது மத்திய சுகாதார அமைச்சகம் மவுனம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வை கணினி வாயிலாக நடத்தப்போவதாக கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், நீட் தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவது, தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது போன்ற பிற பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. உயர்நிலைக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் ஓர் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, அடுத்த ஆண்டில் இருந்து நீட் நுழைவுத் தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுவதுடன், வேறு பல முக்கிய மாற்றங்களும் நடைமுறைக்கு வரும்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன்பு தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர்.

இதேபோன்று, 2024-இல் நிகழ்ந்த வினாத்தாள் கசிவுக்குப் பிறகு டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமர்த்தப்பட்டது. இதன் சார்பில் தேர்வை மேம்படுத்துவதற்கு அக்குழு சுகாதார அமைச்சகத்திடம் மூன்று முக்கியப் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

இவற்றை , என்டிஏவின் அதிகாரிகள் ஆஜரான நிலைக்குழுவின் முன்பு பகிர்ந்துகொண்டனர். அந்தப் பரிந்துரைகளில், பேனா மற்றும் காகித முறையை விடுத்து கணினி வாயிலாகத் தேர்வை நடத்தக் கூறியிருந்தனர்.

இத்துடன் தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவதும், தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது ஆகிய மூன்று அம்சங்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இவற்றில் கடைசிப் பரிந்துரை மட்டும் தற்போது சுகாதார அமைச்சகத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக சுகாதார அமைச்சகத்திடம் ஒரு புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என்டிஏ, நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்தத் தேர்வுக்கான தரநிலைகளைத் தீர்மானிப்பது மத்திய சுகாதார அமைச்சகம்தான். சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தும் தரநிலைகளுக்கு உட்பட்டு நீட் தேர்வை நடத்துவர் என்டிஏவின் பணியாகும்.

அடுத்த ஆண்டிலில் இருந்து கணினி வாயிலாக நடத்தப்படும் என்று அறிவிப்பதற்கு முன்னதாக, சுகாதார அமைச்சகத்துடன் பலமுறை கல்வி அமைச்சகம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தது. எனினும், அப்போது எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இது குறித்து என்டிஏ அதிகாரிகள் வட்டாரத் தகவல்களின்படி, நீட் தேர்வுக்குச் சுகாதார அமைச்சகம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பையும், முயற்சி எண்ணிக்கைக்கு உச்ச வரம்பையும் நிர்ணயிக்கத் திட்டமிடுகிறது. இது சாத்தியமானால், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22 முதல் 23 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். தற்போது, நீட் தேர்வுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முயற்சிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, ஏராளமான விண்ணப்பதாரர்கள் ஐந்து முறைக்கு மேல் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள், ஆனால் அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. இதன் விளைவாக, 50-60 வயதுடையவர்கள் கூட தொடர்ந்து விண்ணப்பிக்கின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வுடன் சேர்த்து ஜேஇஇ மெயின்ஸ் தேர்வை நடத்தவும் ஒரு நீண்டகாலப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதையும் நாடாளுமன்றக் குழுவின் முன் எடுத்துரத்த என்டிஏ, இந்தத் திசையில் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போதைய சூழலில் இந்த இரு தேர்வுகளையும் இணைப்பது சற்றுக் கடினமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், நீட் அல்லது ஜேஇஇ மெயின் தேர்வுகளை எழுதும் மாணவர்கள், தங்களது 12-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய இரண்டையும் பயில்வதால் சிக்கல் எழும் எனும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கருத்து உள்ளது.