惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
小众软件
小众软件
量子位
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
博客园_首页
IT之家
IT之家
S
SegmentFault 最新的问题
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
爱范儿
爱范儿
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை வெல...
தமிழினி · 2026-06-16 · via hindutamil

சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்

Updated on: 

சென்னை: “உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?” என தனது எக்ஸ் பக்கப் பதிவு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணி என இரு தரப்பாக அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி.வேலுமணி இபிஎஸ்ஸுடன் சமாதானம் ஆனார்.

சி.வி.சண்முகம், கடந்த ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் செல்கிறது. கட்சி காப்பாற்றப்பட வேண்டும். கட்சியின் செயற்குழு கூட்டத்தையாவது உடனடியாகக் கூட்ட வேண்டும்” என்று கட்சித் தலைமையின் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்தச் சூழலில், சி.விஜயபாஸ்கரும் தவெகவில் இணையப் போவதாகச் செய்திகள் பரவிய நிலையில், அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.,

அதிமுக தலைமை மீதான அதிருப்தியை மீண்டும் அவர் பதிவு செய்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” எனப் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், சி.விஜயபாஸ்கர் தவெகவுக்கு செல்ல முடிவு எடுத்துவிட்டது போலவும், அதற்கு அதிமுக தலைமை தான் காரணம் என்பதுபோலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.