惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
Y
Y Combinator Blog
M
MIT News - Artificial intelligence
The Cloudflare Blog
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 司徒正美
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
J
Java Code Geeks
云风的 BLOG
云风的 BLOG
C
Check Point Blog
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
V
V2EX
F
Fortinet All Blogs
B
Blog
大猫的无限游戏
大猫的无限游戏
N
Netflix TechBlog - Medium
B
Blog RSS Feed
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“கஜானா காலி எனப் பேசுவது ஆரோக்கியமற்றது" - முதல்வர் ஜோசப்...
2026-05-11 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தனது முதல் உரையிலேயே தமிழக அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாக குறைக்கூற தொடங்கியிருப்பது ஆரோக்கியமற்றது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 'சிறந்த முறையில் மக்களுக்கான நலத்திட்டங்களையும், கல்வி, தொழில், பொருளாதாரம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழ்நாடு செழிப்புற ஆட்சி செய்த திமுக அரசு தொடர வேண்டும்' என மக்களிடம் வாக்குகள் கேட்டு எங்கள் கட்சியின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் சட்ட மன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.

உங்கள் கட்சி ஆட்சி அமைத்திட தனிப் பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை என்ற போதிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி, மக்களாட்சி மாத்திரமே நமக்கானதாக இருக்க முடியும் என்பதால் புதிய அரசு அமைந்திட நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்கிறோம்.

இதுதான் சாத்தியமாகும் என்ற நிலையில் மிக நீண்ட பரிசீலனைக்குப் பிறகு எங்கள் கட்சியின் அவசர உயர்மட்டக் குழு கூட்டம் கூடி அரசு அமைக்க ஆதரவு தருவதாக முடிவு எடுத்து அறிவித்தோம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதிய அரசு அமைப்பதில் தமிழக ஆளுநர் மேலும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அவரின் அரசியல் முதிர்சியையும் மக்களாட்சியின் மேல் அவர் கொண்டிருக்கும் அக்கறையையும் வெளிக்காட்டி இருந்தார்.

அதன் அடிப்படையிலேயே திமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய நாங்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி புதிய அரசு அமைத்திட ஆதரவு கரம் நீட்டியுள்ளோம். ஆனாலும், நாங்கள் கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலேயே தொடர்வதாகவும் அறிவித்திருக்கிறோம்.

அதன் பிறகே, ஆளுநர் உங்களை அழைத்து நேற்றைய தினம் புதிய அரசை அமைத்திருக்கிறார். தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று உங்களின் முதல் உரையிலேயே ""தமிழக அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு குறை கூற தொடங்கியிருப்பது ஆரோக்கியமற்றது.

எந்த அரசும் தேவைக்கேற்ற நிதியைப் பெற கடன் வாங்காமல் இருப்பதில்லை; அந்த கடனும் துறை சார்ந்த உயர்நிலை அதிகாரிகளும் பொருளாதார வல்லுனர்களும் ஒருசேர கலந்து ஆய்வு செய்தே அரசு நிர்வாகத்தின் வரம்புக்கு உட்பட்ட நிலையில் முடிவுகள் எடுத்து கையாளப்படுவது வழக்கம். இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளீர்கள்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வருவாய் மற்றும் நிதிநிலை சார்ந்த பலதரப்பட்ட சரியான தகவல்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டு தான் உங்களின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

உங்கள் தலைமையிலான புதிய ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள், பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற பார்வையில் மாத்திரமே ஒரு முதல்வரின் உரை அமைந்தால் அனைத்து தரப்பினராலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும். எனவே, எடுத்த எடுப்பிலேயே குறைகள் சொல்லி ஆட்சியைத் தொடங்காமல், மக்கள் எதிர்பார்த்திடும் நல்ல, ஆரோக்கியமான, எல்லோருக்குமான சிறந்த ஆட்சியாக அமைந்திடவே விரும்புகிறோம்.

எனவே, ஆரோக்கியமான அரசியலை முன்னிறுத்தி, சிறப்பான நிர்வாகத்தை நடத்தி, நாட்டு மக்களின் நலனை மாத்திரமே தாரக மந்திரமாகக் கொண்டு, மதக் காழ்ப்புணர்ச்சிகளுக்குக் கொஞ்சமும் இடம் தராமல் முந்தைய ஆட்சியில் நடை முறைப்படுத்தப்பட்ட சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை தொடரச் செய்து அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெறுகின்ற நல்லாட்சியைத் தரவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.