惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
小众软件
小众软件
GbyAI
GbyAI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
D
DataBreaches.Net
腾讯CDC
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
B
Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
The Cloudflare Blog
MongoDB | Blog
MongoDB | Blog
有赞技术团队
有赞技术团队
U
Unit 42
博客园 - 司徒正美
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய்க்கு காந்தியின் பேரன் எழுதிய கடிதம்: பேரவை மரபு முதல...
2026-05-06 · via hindutamil

Updated on

2 min read

தவெக தலைவர் விஜய்க்கு, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், விஜய் பின்பற்ற வேண்டிய சட்டப்பேரவை மரபு முதல் அவர் பற்றிக்கொள்ள வேண்டிய கொள்கை வரை பட்டியலிட்டு 5 யோசனைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம்:

அன்புள்ள ஜோசப் விஜய் உங்களுடைய பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களுக்காக வாக்களித்த 35% மக்களில் நானில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது நான் மிரண்டு போனேன். அப்போது எனக்கு ஓர் எண்ணம் உதித்தது. விஜய் அரசியலுக்கு புதியவர். அனுபவமற்றவர். அதுவே அவர் சுத்தமானவர் என்பதற்கும் அடையாளம்.

அவருக்கு சில உண்மைகள் சொல்லப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவருக்கு அது புரியும். அவருடைய நடுத்தர வயதில் அவரை இளைஞர்களின் ஞானம் தட்டி எழுப்பியுள்ளது.

அதனால் சில விஷயங்களை நான் உங்கள் முன்னால் வைக்கலாமா?

1. முதலாவதாக, நீங்கள் வாக்குகள் வென்றுள்ளீர்கள். ஆனால் இன்னமும் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. நீங்கள் இந்தியாவின் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதை முதன்மைக் கடமையாக செய்ய வேண்டியது அவசியம். உங்களின் கீழ் தமிழகம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மரியாதை சிதையாமல் பார்த்துக் கொள்ளட்டும். உங்கள் நாற்காலியை தக்கவைத்துக் கொள்வதற்கான எந்தவொரு இக்கட்டான தருணமும் அதில் நீங்கள் சமரசம் செய்துவிடாமல் பார்த்துக் கொள்ளட்டும்.

<div class="paragraphs"><p>விஜய்</p></div>

விஜய்

2. இரண்டாவதாக, நீங்கள் சட்டப்பேரவைக்குள் விஜய்யாக நுழையுங்கள். உங்கள் பெயருக்கு அர்த்தமான வெற்றி உங்களுடன் வரும். ஆனால், வெற்றி என்பது மிடுக்கில் அல்ல, கற்றலில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வெற்றிகொண்ட மு.க.ஸ்டாலின், ஒரு சமூகத்தின் சுய மரியாதைக்காக சிந்திக்கும் பாரம்பரியப் பின்னணியைக் கொண்டவர். பெரியாரால் வளர்த்தெடுக்கப்பட்ட சமூக சமத்துவத்துக்காக நிற்பவர். பதிவியிலிருந்து விடைபெறும் நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையே தலைமைப் பண்பின் ஊற்றுதான். அவர் சட்டப்பேரவையில் இல்லை என்பதே வேதனையனது.

அவரிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருக்கிறது. ஒரு புத்தும் புது பலகை. அவரிடம் உங்களுக்கு வசப்படாத ஒன்று இருக்கிறது. அது அனுபவம். அதனால் எது திராவிடம் எது திராவிடம் அல்ல வார்த்தைய அலங்காரத்துக்குள் எல்லாம் தயவுகூர்ந்து செல்லாதீர்கள். அவர் சட்டப்பேரவையில் உங்க்ளுக்கு முன்னவரே தவிர உங்களின் எதிரி அல்ல. அதேபோல் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் இருப்பு உங்களுக்கு ஒரு காதல் டூயட் போல அமையட்டுமே தவிர கசப்பான போட்டியாக இருக்க வேண்டாம். ஃபெடரரை நடால் எதிர்கொள்வதெல்லாம் திறன் சமன்பாடு போல் இருக்குமே! அப்படி இருக்கட்டும்.

3. மூன்றாவதாக, உங்களின் கொள்கை என்னவென்று கேட்கப்படும். அது உங்களை எப்போதும் குழப்பமடையச் செய்யக் கூடாது. உங்கள் கொள்கை பற்றி கேட்பவர்களிடம் “எனது கொள்கை மனசாட்சிப் படி நடப்பது என்று சொல்லுங்கள்.”

4. அடுத்ததாக, உங்களுக்கு அமையும் அதிகாரிகள், உங்களுடைய சகாக்களை நம்புகள். அவர்களை ஏவலாளிகளாகப் பார்க்காதீர்கள். அவர்கள் துதிபாடுவதே சேவை என்றும் நினைக்கலாம். அந்தத் தவறானப் பார்வையிலிருந்து அவர்களை விடுவியுங்கள். சர்தார் படேல், உள்துறை அமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் தங்களின் பார்வைகளை அச்சமில்லாமல், வெளிப்படையாக வழங்க ஊக்குவித்தாரோ அதுபோல் நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளின் முரண் கருத்துகளுக்கு செவி கொடுங்கள். மேலும், வெளியேறும் அமைச்சர்கள் மீதான அத்தனை விமர்சனங்களையும் புறந்தள்ளுங்கள்.

5. கடைசியாக, உங்கள் ஆட்சியில் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்வதிலும், பொருளாத வளர்ச்சி நீடிப்பதிலும் சுற்றுச்சுழல் பாதுகாப்பை முதன்மை இலக்காகக் கொள்ளுங்கள். இவற்றைத் தாண்டி வெறுப்புக்கு அப்பாற்பட்ட, அச்சத்தை கடந்த, நியாயமான இந்தியாவுக்கான கலங்கரை விளக்கமாக இருங்கள்.

ஒரு தனிப்பட்ட ரீதியிலான கருத்தைச் சொல்ல வேண்டுமானால், ஒரு கிறிஸ்துவனாக நீங்கள் இந்த அரசாங்கத்தின் தலைவராக இருக்க நேர்ந்தால், அந்தப் பரிசை கடவுளின் தலையீடாகக் கொண்டாடி, தமிழகத்தின் மதச்சார்பற்றத் தன்மையை உயர்த்திப் பிடியுங்கள். அமைதி காக்கவோ, அறிந்து கொள்ளவோ உங்களை யாரும் கட்டளையிடவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வள்ளுவர் கூட நீங்கள் அதைச் செய்ய விரும்பமாட்டார்.

ஒரு முதல்வராக உங்களுக்கு நிறைவான எதிர்காலம் கிட்ட வாழ்த்துகள்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.