惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
IT之家
IT之家
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
美团技术团队
小众软件
小众软件
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
罗磊的独立博客
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம். எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பழனிசாமியின் காலத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வியால் பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் போர்க்கொடி தூக்கினார்.

இவருடன் இணைந்து முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பழனிசாமியிடம் தஞ்சமடைந்தனர். ஆனால் சி.வி.சண்முகம் செல்லவில்லை.

தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என பழனிசாமியை சி.வி.சண்முகம் நிர்ப்பந்தித்துள்ளார்.

முதலில் இணைந்து செயல்படுங்கள், கட்சி பதவி குறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம் என பழனிசாமி கூறியதாகவும், உடன்பாடு எட்டப்படாததால் பழனிசாமியுடன் சி.வி.சண்முகம் இணைய முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை திடீர் திருப்பமாக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிடம் சி.வி.சண்முகம் நேற்று ஒப்படைத்துள்ளது பேசுபொருளாகி இருக்கிறது.

மயிலம் தொகுதியில் மக்களை சந்தித்து நன்றி தெவிக்கும் பணியை முடித்துக் கொண்டு ஓரிரு நாளில் சென்னை செல்கிறார். அவரிடம் எஸ்.பி. வேலுமணி மூலம் அதிமுக தலைமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிகிறது.

தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியை ஒப்படைக்க வேண்டும் என்பதில் சி.வி.சண்முகம் உறுதியாக இருக்கிறார். இதில் உடன் பாடு எட்டப்படுமா என தெரியவில்லை. பதவி விவகாரத்தில் பழனிசாமியும் கறாராக இருக்கிறார்.

பதவி இல்லை என்றால் சி.வி.சண்முகம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதிமுகவுக்கு குட்பை சொல்லிவிட்டு, தனது அரசியல் எதிர்காலத்தை தீர் மானிக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இவரது சாய்ஸ் தவெகவாக இருந்தால், ராஜினாமா செய்த எம்.பி பதவியை மீண்டும் கொடுத்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் மூலமாக காய்கள் நகர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றாலும், அமைச்சர் பதவி சாத்தியம் இல்லை. திண்டிவனம் தொகுதியில் வெற்றிபெற்ற விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பது காரணமாக கருதப்படுகிறது.

ஓரே மாவட்டத்தில் இரு அதிகார மையங்கள் இருந்தால் திமுக ஆட்சியில் பொன்முடி, மஸ்தான் இடையே ஏற்பட்ட சலசலப்பு தவெக ஆட்சியிலும் மீண்டும் ஏற்படலாம் என தவெக தலைமை யோசிக்கலாம் என கூறப்படுகிறது.

இல்லையென்றால் சிறிது காலத்துக்கு மவுனம் காக்கலாம். எனவே சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட நகர்வு என்பது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.