惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
B
Blog
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
爱范儿
爱范儿
博客园_首页
博客园 - 聂微东
量子位
V
Visual Studio Blog
aimingoo的专栏
aimingoo的专栏
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
小众软件
小众软件
大猫的无限游戏
大猫的无限游戏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விசில் கட்சியுடன் விஜயமானவர் செய்த ‘டீல்’ | உள்குத்து உளவாளி
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

‘தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக கூட்டத்துடன் கூட்டமாக ராஜினாமா செய்யாமல் தனி ஆளாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ‘கோட்டை’ மாவட்ட இலைக் கட்சியின் முன்னாள் மாண்புமிகுவான விஜயமானவர்.

எடக்கானவரின் கடிதம் தொடர்பாக சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவுக்காகவும் ராஜினாமா முடிவை ஒத்திவைத்திருந்தவர், அதற்கு முன்னதாக தொகுதி மக்களிடம் கருத்துக் கேட்கப் போகிறேன் என்று ஒரு ரீல் போட்டார்.

அடுத்தகட்டமாக, ‘கோட்டை’ மாவட்டத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் பார்ட் பார்ட்டாக குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று துள்ளிக் ‘குளிக்க’ வைத்தார். அவர்களுக்கு விருந்து சமைப்பதற்காக ‘கோட்டை’யில் இருந்தே ஆட்டுக் கடாக்களும் குற்றாலப் பயணம் மேற்கொண்டன.

ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், தனக்காக ‘உழைத்துக் களைத்தவர்களை’ உற்சாகப்படுத்த விஜயமானவர் இப்படி ‘குளு குளு’ விருந்து கொடுப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், அப்போதெல்லாம் தனது ‘மலை’ தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் தான் அது ‘பாக்யமாகும்’.

இம்முறை, அந்த விருந்தை மாவட்ட அளவில் விரிவுபடுத்தினார். அந்த வகையில் தற்போதும் ஒரு பேட்ச் குற்றாலத்தில் ‘குளித்துக்’ கொண்டிருக்கிறதாம். இது மாத்திரமல்லாது, குளிக்கப் போனவர்கள் திரும்பி வந்ததும் அவர்கள் மூலமாக தனது தொகுதி முழுமைக்கும் இனிப்பு சகிதம் எவர்சில்வர் பாத்திரங்களை கிஃப்டாக கொடுக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம். இது இடைத் தேர்தலுக்கான முன் தேதியிட்ட கவனிப்பாம்.

விஜயமானவர், இலைக் கட்சியில் இனியும் இருக்கப் போவதில்லை என்று தெரிந்ததுமே, சூரியக் கட்சி தரப்பிலிருந்து முன்னாள் மாண்புமிகுக்கள் சிலர், ‘‘நம்ம பக்கம் வந்துருங்களே...” என்று பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

ஆனால், யாருக்கும் பிடிகொடுக்கவில்லையாம். அதேசமயம், விசில் கட்சி தரப்பில் பேசிய விஜயமானவர் தரப்பு, “தேர்தலுக்கான செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், ஜெயித்து வந்ததும் அண்ணனை மாண்புமிகுவாக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறார்கள். அந்த கோரிக்கைக்கு விசில் கட்சி தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே அந்த பக்கம் விஜயமானவர் சாய்ந்ததாக கூறப்படுகிறது.