惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
L
LangChain Blog
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
WordPress大学
WordPress大学
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - Franky
V
Visual Studio Blog
小众软件
小众软件
月光博客
月光博客
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
The Blog of Author Tim Ferriss
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
美团技术团队
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வ...
2026-05-17 · via hindutamil

Updated on

2 min read

திருச்சி: “அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சிபு சோரன் வழக்கு போல கட்சித்தாவல் சட்டம் பாயும்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம். இன்று உலகமே ஒன்று என்ற சூழல் உருவாகிவிட்டது. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. எனவே மூன்றாவது மொழியை படிப்பதில் தவறில்லை. இந்த தேர்தலில் மாற்றம் வேண்டும் என்ற பெயரில் வேட்பாளர் கூட யாரென்று தெரியாமல் தவெகவுக்கு வாக்களித்துவிட்டனர். நல்ல வேளை தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மையை கொடுக்காமல் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளனர்.

வரும் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க அவரின் தொண்டர்கள் பாடுபடுவோம். ஜெயலலிதா சொன்னதைப் போல எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை அழிக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு கட்சிக்கு இதுபோன்ற பின்னடைவுகள் ஏற்படுவது வழக்கம். இந்த சோதனைகளை கடந்து வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.

2006ல் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததால், திமுக மைனாரிட்டி ஆட்சியமைத்தது. தவெகவை எதிர்த்து தான் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது, அவர்கள் எப்படி இப்போது தவெகவை ஆதரிக்கிறார்கள். விசிக, இடதுசாரிகள் வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். தவெக அரசு பெரும்பான்மை இல்லாமல் ஊசலாட்டத்தில் உள்ளதால் தான், அமமுகவின் எம்எல்ஏவை அபகரித்துள்ளனர்.

மன்னார்குடியில் அமமுக எம்எல்ஏ தவெகவையும் எதிர்த்து வெற்றிபெற்றவர். அவரின் ஆதரவை எப்படி தவெக பெறலாம். அதிமுகவை ஊழல் கட்சி என்றும், மற்றும் சிலர் என்றும் சொன்ன விஜய், எப்படி அதிமுகவின் 25 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறலாம். அதிமுகவிலிருந்து சென்று தவெகவை ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்று சொல்பவர்கள், அதிமுகவை அழிக்க நினைக்கும் தவெகவை ஆதரிப்பது எப்படி நியாயமாக இருக்கும்.

நாங்கள் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் உள்ளோம். மன்னார்குடி எம்எல்ஏவுக்கு எதாவது தருவதாக சொல்லித்தானே தவெகவுக்கு அழைத்துள்ளீர்கள், அது குதிரை பேரம் தானே. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், உறுதியாக சிபிஐ விசாரணை கோருவோம். அதன்பின்னர் இந்த ஆட்சிக்கு கஷ்டகாலம் தான். இடதுசாரிகள், விசிக இன்னும் ஆறு மாதங்கள் தாங்குவார்களா?. எனவே தவெக ஆட்சியின் ஆயுள்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 எம்எல்ஏக்களின் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாய வாய்ப்புள்ளது. அதிமுக பொதுச்செயலாளரால் மட்டுமே கொறடாவை நியமிக்க முடியும் என்பது குறித்து பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. சபாநாயகரால் இன்னும் எத்தனை நாட்கள் காலம் தாழ்த்த முடியும், அதற்கும் காலக்கெடு உள்ளது. பழனிசாமி தரப்பு நீதிமன்றம் சென்றால் எல்லாம் வெட்டவெளிச்சமாகி விடும்.

அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சிபு சோரன் வழக்கு போல கட்சித்தாவல் சட்டம் பாயும். தவெக அமைச்சர்கள் பற்றி வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ரீல்ஸை நம்பி மட்டும் ஆட்சி நடத்த முடியாது.

ஜெயலலிதாவின் ஆட்சியமைக்க, ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். மனவருத்தங்கள் இருந்தால் பேசித் தீர்க்க வேண்டும். தவெக அதிமுகவை, ஜெயலலிதாவின் இயக்கத்தை அழிக்கப் பார்க்கிறது. அதனை தனிப்பட்ட கோபதாபங்களுக்காக விட்டுக்கொடுக்க கூடாது. அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்கள் உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும்.

திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்தது. அதுபோல அதிமுக தலைவர்களும் பொறுமை காக்க வேண்டும். எனவே அதிமுக தொண்டர்கள் பெயரை சொல்லி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் வரலாறு அவர்களை மன்னிக்காது. எம்ஜிஆர் தொடங்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை விஜய் அழிக்கப்பார்க்கிறார் என்பதே உண்மை. அதற்கு யாரும் பலியாக வேண்டாம். சட்டப்படி பழனிசாமி தான் பொதுச் செயலாளர், அவருக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது.

சட்டைப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு, அதிமுகவையும், அமமுகவையும் அழிக்க, தவெகவுக்கு ஏஜெண்டாக செயல்படுகிறார். அவர் பழனிசாமியை பார்த்து அம்மாவின் ஆத்மா மன்னிக்காது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் ஆத்மா செங்கோட்டையனை மன்னிக்காது” என்றார்.