惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
月光博客
月光博客
博客园 - 聂微东
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
S
SegmentFault 最新的问题
F
Fortinet All Blogs
H
Help Net Security
J
Java Code Geeks
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கி...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் அந்த மாவட்டத்தில் அதிக செல்வாக்குள்ள ஹுமாயூன் கபீரின் ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பும் கட்டைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், அங்கிருந்த காரையும் அவர்கள் தாக்கினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்து பாதுகாப்புப் படையினர் விரைந்ததை அடுத்து அங்கு அமைதி ஏற்பட்டது.

முன்னதாக, முர்ஷிதாபாத்தில் நேற்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் பாதிக்கப்பட்டார். ஹுமாயூன் கபீரின் கட்சியினரே தாக்குதலுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறி இருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட ஹுமாயூன் கபீர் அங்கு வந்தார். அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர் சம்பவ இடத்துக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். ஹுமாயூன் கபீரை போலீசார் மிகுந்த பாதுகாப்போடு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபீர், “தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும். அது அமைதியாக நடந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த வாக்குச்சாவடிகளில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருடன் இணைந்து இரவு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பணத்தைக் கொடுத்து அதிகாரிகளுடன் கைகோத்து தேர்தல் நடைமுறைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி வருகின்றனர்.

வாக்குச்சாவடிகளுக்குள் நிலைமை சீராக இருக்கலாம். ஆனால் வெளியே மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இரவு முழுவதும் மிரட்டப்பட்டார்கள். தேர்தல் ஆணையம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மாநிலக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், மத்திய படைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதும் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் செல்வாக்கால் நடக்கின்றன. தேர்தல் நடவடிக்கைகள் சமரசம் செய்யப்படுகின்றன. சாமானிய மக்களால் என்ன செய்ய முடியும்?” எனக் கூறினார்.

முர்ஷிதாபாத்தின் டோம்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நஜர்புரில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

முர்ஷிதாபாத் வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசன்சோல் தக்ஷின் தொகுதி பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா, “இதை நான் காலையிலேயே சொன்னேன். மம்தா பானர்ஜி அரசு இதுபோன்ற செயல்களைச் செய்யும், குண்டுகளை வீசும், மின்வெட்டை ஏற்படுத்தும். அவர்கள் கேமராக்களை சேதப்படுத்த முயல்வார்கள்.

இதுதான் திரிணமூல் காங்கிரஸின் செயல்முறை. இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் வாக்காளர்களை வாக்களிக்க வரவிடாமல் தடுத்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுபோன்ற சம்பவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று 152 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.