

























நடிகை சமந்தா, தனது ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இதை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ‘ஓ! பேபி’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். இதில் குல்ஷன் தேவ்வய்யா, திகாந்த், கவுதமி, மஞ்சுஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது காதல், உறவு மற்றும் வலிமையை அடிப்படையாகக் கொண்ட கதை என்று சமந்தா கூறியிருந்தார்.
மயோசிடிஸ் பாதிப்புக்குப் பிறகு சமந்தா நடித்துள்ள படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் மே 15-ம் தேடி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 19-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。