惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
GRAHAM CLULEY
博客园_首页
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
The GitHub Blog
The GitHub Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
C
Cisco Blogs
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MyScale Blog
MyScale Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
F
Full Disclosure
Cloudbric
Cloudbric
J
Java Code Geeks
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
Last Week in AI
Last Week in AI
The Hacker News
The Hacker News
量子位
T
The Blog of Author Tim Ferriss
T
Threatpost
Cisco Talos Blog
Cisco Talos Blog
C
Check Point Blog
AWS News Blog
AWS News Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
Threat Research - Cisco Blogs
Project Zero
Project Zero
Scott Helme
Scott Helme
N
Netflix TechBlog - Medium
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tenable Blog
S
Schneier on Security
T
Tor Project blog
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
MongoDB | Blog
MongoDB | Blog
Y
Y Combinator Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
H
Heimdal Security Blog
T
Tailwind CSS Blog
P
Privacy International News Feed
爱范儿
爱范儿
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
博客园 - 叶小钗
人人都是产品经理
人人都是产品经理
The Last Watchdog
The Last Watchdog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 21 - 27
2026-05-21 · via hindutamil

Updated on

10 min read

மேஷம்:

பலன்கள்: இந்த வாரம் ராசியிலேயே செவ்வாய் ஆட்சியாக இருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானத்தை மாறக்கூடிய குரு பார்ப்பதால் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியது வரும். தேவைப்படும் இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழுவீர்க்ள்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உற்றார், உறவினர்களுடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும்.

பெண்களுக்கு அலுவலகம் செல்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போவதால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.

அஸ்வினி: இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும்.

பரிகாரம்: தினமும் கந்தர் அனுபூதி சொல்லி முருகன் வழிபாடு செய்யுங்கள்

ரிஷபம்:

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தை ராகு அலங்கரிக்கிறார். தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் இருக்கும். புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். தேவையான கையிருப்பு இருக்கும். குடும்பத்தில் சிற்சில விவாதங்கள் வந்து போகலாம்.

பிள்ளைகளின் விசயத்தில் கவலை வேண்டாம். இருக்கும் இடத்தில் இருப்பது இன்னும் அதிக நன்மையை அளிக்கக் கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நபர்கள் வேலையை தொடந்து நல்ல முறையாக பணியாற்றி வருவீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும். கேட்ட உதவிகள் அலுவலகத்தில் கிடைத்தே தீரும். சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள்.

பெண்கள் நல்ல விதமாக குடும்பத்தை வழி நடத்துவார்கள். மாமியார் மருமகள் பிரச்சினையின்றி சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்கள் மேற்படிப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோர் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

ரோகிணி: இந்த வாரம் தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

பரிகாரம்: நவ கிரகங்களிலுள்ள சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

மிதுனம்:

பலன்கள்: இந்த வாரம் ராசியில் இருக்கும் சுக்கிரன் - சுக்கிரன் வீட்டில் புதன் என பரிவர்த்தனை யோகம் பெறுகிறீர்கள். வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். தொழிலில் வருமானம் நல்ல படியாக இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும். குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். வீடு வாங்குவது கட்டுவது அனைத்தும் பிரச்சினையின்றி நடந்தேறும். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் அனைத்தும் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு உங்களுக்கு இப்போது கிடைக்கும். பெண்களுக்கு நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். தாய் வீட்டிற்குச் சென்றுவருவீர்கள். மனதில் நிம்மதி இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். அனைவரின் பாராட்டும், நன்மதிப்பும் கிடைக்கும். முயற்சியில் வெற்றி கிட்டும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண வரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பண வரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

திருவாதிரை: இந்த வாரம் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். லாபஸ்தான குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அவில் நிவேதனம் செய்யுங்கள்.

கடகம்:

பலன்கள்: இந்த வாரம் தொடங்கும் தருணத்தில் ராசிநாதன் சந்திரன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாகும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

பங்குதாரர்களுடன் சிறு வாக்கு வாதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் பண வரவிற்கு குறைவிருக்காது. அதிக வருமானம் கிடைக்கும். உடல் நிலையில் அவ்வப்போது தொந்தரவுகள் வருவதை தவிர உங்களுக்கு நன்மையே நடக்கும். வேலைப் பளுவின் காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெற்று தக்க சன்மானம் பெறுவர்.

நிர்வாகத் திறமை கொண்டவர்கள் உயர்ந்த நிலையை அடையப் பெறுவார்கள். பெண்களின் நீண்ட நாளைய கனவு நனவாகும். கணவரின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு உண்டான பொறுப்புகள் அதிகரிக்கும். நேர்மையாக நடந்து கொள்வதன் மூலம் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறலாம்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பூசம்: எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். ராசியாதிபதி சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று சஞ்சாரம் செய்வதால் பண வரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும்.

ஆயில்யம்: இந்த வாரம் வீண் பிரச்சனைகள் தலை தூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மன வருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளை மல்லிகை மலர் கொண்டு வழிபட்டு வாருங்கள்.

சிம்மம்:

பலன்கள்: இந்த வாரம் கேந்திரங்கள் பலமாக இருக்கிறது. உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள். கோபுர தரிசனம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். தொழிலில் உன்னத நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். நிறைய உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நீங்கள் சற்று குறைவாகத்தான் பெற முடியும்.

குடும்பத்தை பொறுத்தவரை சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து குல தெய்வ பிரார்த்தனையை முடித்து வைப்பர். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கூடிய விரைவில் நிகழும். உத்தியோகத்தில் முன்னேற்றமும், ஊக்கமும் சற்று குறைந்து காணப்படும். வங்கிக் கடன் சிலருக்கு கிடைக்கப் பெறுவீர்கள்.

உடன் பணிபுரிபவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். பெண்கள் சிறப்பாக செயல்பட்டு குடும்பத்தில் நற்பெயர் சம்பாதிப்பீர்கள்.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

மகம்: இந்த வாரம் குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

பூரம்: இந்த வாரம் உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து தியானம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ மாலை சாற்றுங்கள்.

கன்னி:

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். அதே வேளையில் சனி பகவான் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப்பட நேரலாம். ஆதலால் மன சோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் நேரம். தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு முக்கியமான கால கட்டம். புதிய தொழில் துவங்குவது இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது போன்ற அனைத்துமே செய்யலாம்.

குடும்பத்தில் சந்தோஷம் குடிகொண்டிருக்கும். அனைத்து வசதி வாய்ப்புகளும் தாமாகவே வந்து சேரும். அரசு வேலைகளில் இருந்த தொய்வு நிலை மாறும். உங்கள் பேச்சிற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெற்று அதிக ஆதாயங்களைப் பெறுவீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அது உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வெற்றியாய் அமையும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிறரால் தொல்லை வரும். மாணவர்களுக்கு வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற சிறப்பாக பயிலுவீர்கள். வெற்றி உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் கால தாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

அஸ்தம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பண வரத்து திருப்தி தரும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பண தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வரவும்.

துலாம்:

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். ராசியை செவ்வாய் பகவான் பார்க்கிறார். வீட்டில் நிம்மதியான நிலை காணப்படும். தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

முக்கிய முடிவுகளை இப்போது செய்யலாம். சிலர் உங்களைப் பார்த்து பொறாமையாக நினைப்பார்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏதும் இராது. நல்ல சுபிட்ஷமும் சவுபாக்கியமும் உண்டாகும். உடன் பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பும், பாசமும் அதிகமாக காணப்படும். தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெகு தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்குவார்கள். அதிக திறமையுடன் அதை செய்து முடிப்பீர்கள். ஆதலால் நல்ல பேரும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும். மாணவர்கள் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். மனம் விரும்பும் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மன சங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மர் காயத்ரீ சொல்லி பானகம் நிவேதனம் செய்யுங்கள்.

விருச்சிகம்:

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். ராசியைப் பார்க்கிறார். நல்ல ஏற்றம் கிடைக்கும். உங்களை முன்னேற்ற வழியில் கொண்டு செல்லும். தொழில் - வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் அதிக நஷ்டம் இல்லாமல் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பது அவசியம். குடும்பத்தில் முக்கிய நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளாதார விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு நீங்களே இழுத்துப் போட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் அதனால் கிடைக்க வேண்டிய ஆதாயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் அவ்வளவாக வேலையைச் செய்ய முடியாது. உடல் நிலையில் சோர்வு அதிகமாக காணப்படும். மாணவ-மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சில முயற்சிகள் கூட உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பண வரத்து திருப்தி தரும்.

கேட்டை: இந்த வாரம் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

பரிகாரம்: முருகனை வழிபட்டு குமாரஸ்தவம் சொல்லி வாருங்கள்.

தனுசு:

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் குரு அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். முக்கிய நபர்களை இந்த காலகட்டத்தில் சந்திக்க வெற்றி உண்டாகும்.

குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அதை சமாளிக்கலாம். நீங்கள் பேசுவதைத் தவறாக புரிந்து கொண்டு உங்களிடம் வாக்கு வாதத்திற்கு குடும்பத்தினர் வரலாம். எனவே வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப் பளு இருக்கும்.

மேலதிகாரிகளின் வேலையயும் நீங்களே செய்ய வேண்டி இருக்கும். அதிக நேரம் வேலை செய்யும் நிலை உருவாகும். பெண்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு உதவித் தொகைகள் கிடைக்கும். சிலர் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுத்தொகை வெல்வீர்கள்.

மூலம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூராடம்: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். புதன் சஞ்சாரத்தின் மூலம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும்.

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனுக்கு வெண் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள்.

மகரம்:

பலன்கள்: இந்த வாரம் ராசியை குரு பகவான் நேரடி ஏழாம் பார்வையாக பார்க்க இருக்கிறார். அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும். ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள். தொழிலில் உங்களுக்கு அதிக நன்மைகள் ஏற்பட்டு எந்த தடையும் இல்லாமல் தொழில் அபிவிருத்தி இருக்கும்.

நல்ல லாபத்தையும் பார்க்கலாம். முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். சிறு பிரச்சினைகளுக்கு கூட டென்ஷன் ஆவீர்கள். சிலருக்கு அலர்ஜி தொந்தரவுகள் வந்து நீங்கும். உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான அனைத்தும் வசதிக்கேற்ப செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல அனுபவசாலிகளின் அறிவுரைகள் கிடைக்கும்.

சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த பணத் தேவை பூர்த்தியாகும். பெண்களுக்கு அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். ஆடை, ஆபரணங்களை சேர்த்து வைப்பீர்கள். மாமியாருடன் நல் உறவு நீடிக்கும். மாணவர்கள் படிப்பில் ஆவல் உண்டாகும். பெரியோரின் ஆசி உண்டாகும். வீண் விவகாரங்களுக்கு செல்ல வேண்டாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.

திருவோணம்: இந்த வாரம் வீடு, மனை வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பண வரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக் கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.

கும்பம்:

பலன்கள்: இந்த வாரம் தொழிலில் நல்ல முன்னேற்றங்களும் வருமானமும் அதிகரித்து காணப்படும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல வியாபாரம் நடக்கும். தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்பனையாகிவிடும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சங்கடங்கள் வந்து விலகும். மனைவியின் உடல் நலத்தில் தகுந்த கவனம் தேவை.

வீடு, மனை, வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். எதிரிகளும் உங்களுக்கு நன்மதிப்பை தருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த சிறப்புற்ற செயல் நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

பெண்கள் கை தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டு நன்மை அடைவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். மாணவர்கள் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல் தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில் நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் செலவு அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் சாற்றுங்கள்.

மீனம்:

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் குரு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும். தொழிலைப் பொறுத்தவரை பிரச்சினைகள் வந்தாலும் அது உங்களை பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது.

நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். குடும்பத்தில் தந்தை வழி சார்ந்த பங்காளி உறவு என்ற அமைப்பில் வருபவர்கள் உங்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் தருவார்கள் கவனமுடன் செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.

திருமண வயதினருக்கு முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள். மாணவர்கள் மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன் கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வ நிலை உயரும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும்.

ரேவதி: இந்த வாரம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் மூலம் திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும்.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வந்தால் தொழில் பிரச்சனைகள் தீரும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.