惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
D
Docker
Google DeepMind News
Google DeepMind News
GbyAI
GbyAI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
N
Netflix TechBlog - Medium
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
H
Help Net Security
B
Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக வாக்குறுதியின்படி ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக...
தமிழினி · 2026-05-13 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, மாணவர்களுக்கான ரூ.20 லட்சம் வரையிலான பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் வரலாற்றில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மிகப் பெரிய ஆதரவைப் பெற்ற மக்கள் இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து தேர்தலில் வெற்றியும் பெற்று இன்று தமிழக அரசியலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த இயக்கத்தின் மீது மாணவர்களும் இளைஞர்களும் மிகுந்த நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு மாணவரின் உயர்கல்விக்கும் முழுமையான உத்தரவாதம் அளிக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதி பொருள் 4 வரிசை எண் 4-ல் உள்ள இளைஞர் நலன் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்த திட்டத்தை நிறைவேற்றி இளங்கலை முதல் பிஎச்.டி. வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கு அரசு உத்தரவாதம் வழங்கப்படும் என்று முக்கியமான வாக்குறுதியை அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மை, கலை மற்றும் அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட எந்த உயர்கல்விப் படிப்பாக இருந்தாலும், நிதி பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்விக் கடனுக்காக வங்கி கடுமையான நிபந்தனைகள் விதிப்பது, பிணையம் கோருவது போன்ற காரணங்களால் பல திறமையான மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில், அரசு உத்தரவாதத்துடன் ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் கிடைப்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரத் தயாராக உள்ளனர்.

பெற்றோர்கள் கல்விக் கட்டணம், விடுதி செலவு, புத்தகங்கள் மற்றும் பிற செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர். இந்நேரத்தில், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கான அரசு உத்தரவாதம் நடைமுறைப்படுத்தப்பட்டால், எந்த மாணவரும் பணத்தட்டுப்பாடு காரணமாக உயர்கல்வியை இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.

இளைஞர்களும் மாணவர்களும் பெரும் நம்பிக்கையுடன் ஆதரித்து வரும் தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் வாக்குறுதியை விரைவாக நடைமுறைப்படுத்தி, மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்க வேண்டும்.

இது கல்விக்கான ஆதரவாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் எதிர்கால தலைமுறைக்கான வலுவான முதலீடாகவும் அமையும். எனவே, மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இளங்கலை முதல் பிஎச்.டி. வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கான அரசு உத்தரவாதத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.