惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
爱范儿
爱范儿
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
云风的 BLOG
云风的 BLOG
C
Check Point Blog
H
Help Net Security
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
U
Unit 42
T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
N
Netflix TechBlog - Medium
S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்திய வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஐ.ந...
2026-05-15 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​திய வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்- அப் நிறுவனங்​களில் முதலீடு செய்ய ஐ.நா.​வின் ஐஎப்​ஏடி அமைப்பு விருப்பம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அடுத்த ஆண்​டில் 5 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் என்று அறி​விக்கப்பட்டுள்​ளது.

ஐ.நா. சபை சார்​பில் கடந்த 1977-ம் ஆண்​டில் வேளாண் வளர்ச்சிக்கான சர்​வ​தேச நிதி​யம் (ஐஎப்​ஏடி) தொடங்​கப்​பட்​டது. இந்த அமைப்பு உலகம் முழு​வதும் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் 200-க்​கும் மேற்​பட்ட வேளாண் திட்​டங்​களை செயல்​படுத்தி வருகிறது.

இத்​தாலி தலைநகர் ரோமை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் ஐஎப்​டிஏ அமைப்பு பின்​தங்​கிய நாடு​கள், வளரும் நாடு​களில் வறுமையை ஒழிக்க அதிதீ​விர நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இந்த சூழலில் ஐஎப்​டிஏ முதல்​முறை​யாக இந்திய தனி​யார் வேளாண் துறை​யில் கால் பதிக்க திட்​ட​மிட்டு உள்ளது.

இதற்​காக 2026- 2033 வரைவு திட்​டத்தை அந்த அமைப்பு வரையறுத்து உள்​ளது. இது குறித்து அமைப்​பின் துணைத் தலைவர் டோனால் பிர​வுண், பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஐஎப்​டிஏ கொள்கை விதிகளில் பல்வேறு சீர்​திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.

இதன்​படி அரசு நிறு​வனங்​கள் மட்​டுமன்றி தனி​யார் நிறுவனங்களு​ட​னும் இணைந்து செயல்பட முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. முதல்​ கட்​ட​மாக இந்​தி​யா​வின் வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களு​டன் கைகோக்க உள்​ளோம். அடுத்த ஆண்​டில் இந்​திய ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களு​டன் 4 முதல் 5 ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திடு​வோம்.

இந்​திய அரசு மற்​றும் இந்​தி​யா​வின் பல்​வேறு மாநில அரசுடன் இணைந்து 110 லட்​சிய மாவட்​டங்​கள் திட்​டத்​தில் பங்​கேற்க உள்ளோம். எங்​களது திட்​டங்​களுக்கு நபார்டு அமைப்​பும் நிதி உதவி​களை வழங்க முன்​வந்​திருக்​கிறது.

இந்​தி​யா​வின் சிறு விவ​சா​யிகளு​டன் இணைந்து செயல்பட திட்​ட​மிட்டு உள்​ளோம். சிறு விவ​சா​யிகளுக்​காக கிராமங்​களில் தானிய சேமிப்பு கிடங்​கு​கள், உணவு பதப்​படுத்​துதல் கூடங்​களை அமைப்போம். விவ​சா​யிகளின் சந்​தை​வாய்ப்​பு​களை உறுதி செய்வோம்.

உலகம் முழு​வதும் பரு​வநிலை மாறு​பாடு மிகப்​பெரிய பிரச்சினையாக உரு​வெடுத்து வரு​கிறது. இந்த சூழலில் பரு​வநிலை மாற்​றங்​களை தாங்கி வளரும் பயிர்​கள் சார்ந்த ஆராய்ச்சி​யில் ஈடு​படு​வோம். கோது​மை, நெல் சாகுபடிக்கு அதிக தண்​ணீர் தேவைப்​படு​கிறது. இதற்கு மாற்​றாக சிறு​தானிய சாகுபடிக்கு ஊக்​கம் அளிப்​போம்.

ஒரு சிறு விவ​சாயி 10 கிலோ அரிசி வைத்​திருந்​தால், அந்த அரிசியை நல்ல விலைக்கு விற்​பனை செய்​வது மிக​வும் கடினம். எனவே சிறு விவ​சா​யிகளை ஒன்​றிணைத்து கூட்​டுறவு சங்கங்களை அமைப்​போம். இதன்​மூலம் பல்​வேறு விவ​சா​யிகள் கூட்​டுறவு சங்​கத்​தில் அரிசியை வழங்​கு​வார்​கள். கூட்​டுறவு சங்கம் மூலம் நல்ல விலைக்கு அரிசியை விற்க முடி​யும். இவ்​வாறு ஐஎப்​ஏடி துணைத்​ தலை​வர்​ டோனால்​ பிர​வுண்​ தெரி​வித்​துள்​ளார்​.