惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
aimingoo的专栏
aimingoo的专栏
V
V2EX
博客园 - 【当耐特】
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
MyScale Blog
MyScale Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
月光博客
月光博客
I
InfoQ
WordPress大学
WordPress大学
Martin Fowler
Martin Fowler
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
小众软件
小众软件
罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பாஜக எங்களை அடக்கி, முடக்கிவிட முடியாது” - ஐடி ரெய்டு கு...
2026-04-20 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “பாஜக எங்களை அடக்கி, முடக்கி விட முடியாது. நாங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என நினைக்கிறார்கள்” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஸ்ரீபெரும்புதூரில் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறார்கள். எனது வீடு, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது வீடுகளும் முற்றுகையிடப்பட்டுள்ளது. இன்று காலை ராகுல் காந்தி திருவனந்தபுரம் வருகிறார். அவரை காணச் செல்லவிருந்தேன். ஆனால் அனைத்து விமானங்களும் சென்ற பிறகு அவர்கள் கலைந்து செல்கிறார்கள். இது என்ன அநியாயம். இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா?

நான் ஒரு வேட்பாளர் , சுதந்திரமாக வாக்கு சேகரிக்க வேண்டும். நான் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகிறார். ஒரு மாநிலத் தலைவராக நான்தான் அவரின் வருகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நான்தான் குளச்சலுக்கும், நாங்குநேரிக்கும், சங்கரன் கோயிலுக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கும் அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.

நான் அவருடன் சென்று அதை ஏற்பாடு செய்யக் கூடாது என்று என்னை முடக்குவது எந்த விதத்தில் நியாயம்?. ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது உங்களுக்கு பிடிக்கவில்லையா? இல்லை மாநிலத் தலைவராக நான் அதை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தடுக்கிறீர்களா?. எங்களை கட்டி போட முடியாது; நீங்கள் அச்சுறுத்த முடியாது.

ஏன் எங்களுக்கு மட்டும் இந்த பிரச்சினை; அதிமுக வேட்பாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுக வேட்பாளர்கள் பாஜகவில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் ஆதரவு இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது. அவர்களின் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் கிடையாது.

எங்களை அச்சுறுத்தி துன்புறுத்துகிறார்கள். பாஜக எங்களை அடக்கி, முடக்கி விட முடியாது. நீங்கள் அடிக்க அடிக்க நாங்கள் எழுந்து தான் நிற்போம். நாங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என நினைக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். தமிழ் பேசும் அதிகாரிகளே ஒருவர்கூட இல்லை. என்ன மாதிரியான அச்சுறுத்தல் இது” இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் செல்வப்பெருந்தகையின் பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு கடும் கண்டனம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பாஜக. அரசு செய்து கொண்டிருக்கும் அட்டூழியத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.