惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
aimingoo的专栏
aimingoo的专栏
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
宝玉的分享
宝玉的分享
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கைரேகை பார்த்து பலன் சொல்லும் ChatGPT
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: கைரேகை பார்த்து நம் ஊர் ஜோசியர்கள் போல பலன் சொல்கிறது ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன ‘சாட்ஜிபிடி’. இது குறித்து பலரும் ஏற்கெனவே அறிந்திருக்கலாம். இப்போது மீண்டும் இது பேசு பொருளாகி உள்ளது.

‘டிமாண்டி காலனி’ பாகம் ஒன்றில் ‘அப்போ என் திருமண வாழ்க்கை?’ என்று ஜோசியராக வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரிடம், நடிகர் ரமேஷ் திலக் கேட்பார். அந்த காட்சி நகைச்சுவையாக இருக்கும் வகையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி இருப்பார். அதுபோல நிஜ வாழக்கையிலும் சிலருக்கு அனுபவம் கிடைத்திருக்கும். இப்போது கைரேகை பார்த்து பலன் சொல்லும் பணியை சாட்ஜிபிடி செய்கிறது.

வழக்கம் போலவே சாட்ஜிபிடி ஏஐ சாட்டில் அதன் பயனர்கள் தங்கள் உள்ளங்கையின் படத்தை அப்லோட் செய்து, ‘எனது கைரேகையை படித்து சொல்’ என்று ப்ராம்ப்ட் (Prompt) கொடுத்தால் போதும். அடுத்த சில வினாடிகளில் பலனை சொல்கிறது ChatGPT. இதை கைரேகை சாஸ்திர பாணியிலான விளக்கமாக அந்த ஏஐ பாட் தருகிறது. இதில் ஆயுள், குணாதிசயம், பணிவாய்ப்பு, திருமணம் குறித்து கணிப்புகளை வழங்குகிறது.

“கைரேகை உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லை. அது உங்கள் இயல்புகளையே பிரதிபலிக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் விடாமுயற்சியும் பொறுமையும் இருந்தால் அதன் விளைவு உங்களுக்கு நலன் சேர்க்கும்”, “உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளிலேயே உள்ளது” என்று இதன் இறுதியில் ChatGPT டிஸ்க்ளைமர் தருகிறது. அது சொல்வது போலவே பலரும் ஏஐ சாட்பாட்களுடன் வேடிக்கையாக தினமும் அளவளாவுவது உண்டு. அதுபோல இதையும் வேடிக்கையானதாக அணுக வேண்டும்.

சாட்ஜிபிடி? - தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட் தான் சாட்ஜிபிடி. இதனை ஓப்பன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்.

கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. கதையைச் சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். இதன் மூலம் படங்களையும் ஜெனரேட் செய்யலாம்.