惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
Engineering at Meta
Engineering at Meta
Stack Overflow Blog
Stack Overflow Blog
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
B
Blog
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
阮一峰的网络日志
阮一峰的网络日志
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
C
Check Point Blog
月光博客
月光博客
L
LangChain Blog
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரதமரை சந்திக்கிறார் முதல்வர்: தவெக ஆட்சி அமைந்த பிறகு இ...
செய்திப்பிரிவு · 2026-05-27 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்​வர் விஜய் முதல் முறை​யாக இன்று டெல்லி பயணம் மேற்​கொள்​கிறார். பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்த பிறகு, காங்​கிரஸ் தலை​வர்​கள் சோனி​யா, ராகுலை​யும் அவர் சந்​தித்து பேசுகிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்த தமிழக வெற்​றிக் கழகம் (தவெக), காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்​எல் ஆகிய கட்​சிகளு​டன் கூட்​டணி அமைத்து ஆட்சி அமைத்​தது. முதல்​வர் விஜய் உட்பட 35 பேர் அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​றுள்​ளனர். தமிழக வரலாற்​றிலேயே கூட்​டணி அமைச்​சரவை அமைத்த விஜய்யை பல்​வேறு அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினர் பாராட்​டினர்.

முதல்​வர் பொறுப்​பேற்ற பிறகு சென்னை தலை​மைச் செயல​கத்​துக்கு வார நாட்​களில் தின​மும் காலை 10 மணிக்​குள் வருகை தரும் முதல்​வர் விஜய், மாலை வரை இருந்து துறை அலு​வல்​களைக் கவனித்து வரு​வது அரசு ஊழியர்​களை ஆச்​சரியமடைய செய்​துள்​ளது. முன்​ன​தாக மரி​யாதை நிமித்​த​மாக திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, பாமக தலை​வர் அன்​புமணி, விசிக தலை​வர் திரு​மாவளவன் உள்​ளிட்ட தலை​வர்​களை அவர்​களின் இல்​லத்​துக்கே சென்று முதல்​வர் விஜய் வாழ்த்து பெற்​றார்.

இந்​நிலை​யில், தமிழக முதல்​வ​ராக பதவி​யேற்ற விஜய், பிரதமர் நரேந்​திர மோடியை இன்று சந்​திக்​க​வுள்​ளார். இதற்​காக, இன்று காலை சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்​கிறார். முதலில் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு அரசு இல்​லத்​துக்கு செல்​லும் விஜய்க்​கு, சிறப்​பான வரவேற்பு அளிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தொடர்ந்​து, ஜவகர்​லால் நேரு பல்​கலைக்​கழக வளாகத்​தில் திரு​வள்​ளுவர் சிலையை திறந்து வைக்​கும் நிகழ்​வில் விஜய் பங்​கேற்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இந்த நிகழ்ச்​சிகள் முடிந்த பின்​னர், மாலை 4.30 மணி​யள​வில் பிரதமர் நரேந்​திர மோடியை, முதல்​வர் விஜய் சந்​திக்​கிறார். முதல்​வ​ராகப் பதவி​யேற்ற பிறகு பிரதமர் நரேந்​திர மோடியை விஜய் சந்​திப்​பது பல்​வேறு எதிர்​பார்ப்​பு​களை ஏற்​படுத்தி உள்​ளது. இந்த சந்​திப்​பின் போது, பல்​வேறு திட்​டங்​களுக்​கான நிதி ஒதுக்​கீடு, வளர்ச்​சித் திட்​டங்​களுக்​குக் கிடைக்க வேண்​டிய ஒப்​புதல்​கள், மேகே​தாட்டு அணை விவ​காரம் உட்பட தமிழகத்​தின் கோரிக்​கைகள் குறித்த விரி​வான மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம், முதல்​வர் விஜய் வழங்​க​வுள்​ளார். தமிழகத்​துக்கு வர வேண்​டிய நிதி குறித்​தும் விஜய் பேசவுள்​ளார்.

டெல்லியில் முன்னேற்பாடு: ஏற்​கெனவே, தமிழக அரசின் தலைமை செயலர் மற்​றும் உள்​துறை செயலர் ஆகியோர் டெல்லி சென்று முகாமிட்​டுள்​ளனர். பிரதமர் நரேந்​திர மோடி சந்​திப்பை நிறைவு செய்​ததும், முதல்​வர் விஜய் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் ஆகியோரை​யும் சந்​திக்க இருப்​ப​தாக தகவல்​கள் வரு​கின்​றன.

தொடர்ந்து அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சி​யின் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே உள்​ளிட்ட தலை​வர்​களை​யும் முதல்​வர் விஜய் சந்​தித்து பேச உள்​ளார். தொடர்ந்​து, இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி ஆகியோரை விஜய் சந்​திக்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. முதல்​வர் விஜய்​யின் முதல்​ டெல்​லி பயணம்​ என்​ப​தால்​ பலதரப்​பிலும்​ பெரும்​ எ​திர்​பார்​ப்​பு நிலவுகிறது.

69% ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால் தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்நாடு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று மே.27-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எனவே, நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, உரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வி.சம்பத் குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி, சட்டத் துறை செயலர் எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.