惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
Y
Y Combinator Blog
博客园_首页
有赞技术团队
有赞技术团队
博客园 - Franky
腾讯CDC
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - 【当耐特】
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
MyScale Blog
MyScale Blog
H
Help Net Security
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
V
V2EX
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணைந்தது செல்லுமா? - அரசியல...
2026-04-28 · via hindutamil

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிக்கள்

Updated on

2 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தது செல்லாது என்று முன்னாள் மக்களவை பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்​மி கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 10 எம்​.பி.க்​கள் இருந்தனர். கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வ​ரான ராகவ் சத்தா எம்​.பி., அக்​கட்​சி​யின் மாநிலங்​களவை துணைத் தலை​வ​ராக இருந்து வந்​தார். சமீபத்​தில் அந்த பொறுப்​பில் இருந்து அவர் நீக்​கப்​பட்​டு, அவருக்கு பதிலாக அசோக் மிட்​டல் நியமிக்​கப்​பட்​டார்.

இந்நிலை​யில், ராகவ் சத்தா அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைவ​தாக கடந்த 24-ம் தேதி அறி​வித்​தார். அவருடன், அக்​கட்​சியின் மேலும் 6 மாநிலங்​களவை எம்​.பி.க்​களும் பாஜக​வில் இணைவதாக அறி​வித்தனர். மேலும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பது தொடர்பாக 7 பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை அவர்கள் மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனிடம் சமர்ப்​பித்​தனர்.

இதையடுத்து, 7 பேரும் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் சென்று கட்சித் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கி நிதின் நபின் வரவேற்றார். இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.

கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​படி, ஒரு கட்​சி​யின் மூன்றில் 2 பங்கு உறுப்​பினர்​கள் வில​கி, வேறொரு கட்​சியில் இணைந்​தால் மட்​டுமே அவர்​களின் பதவி பறி​போகாது. இந்த நிலை​யில், தற்​போது மூன்​றில் 2 பங்கு உறுப்​பினர்​கள் ஒரே நேரத்​தில் வில​கி​யுள்​ள​தால், அவர்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்​டம் பாயாது என கூறப்படுகிறது. இந்த அடிப்படையில், பாஜகவில் இணையும் ஏழு எம்பிக்களின் கடிதத்தை சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா குழுவினர், “இணைப்புக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நாங்கள் பூர்த்தி செய்துவிட்டோம். எனவே, பாஜகவுடனான இணைப்பு சட்டப்பூர்வமானது” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 7 பேர் கட்சி மாறியதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் சஞ்சய் சிங், மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய 7 எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் மக்களவை பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி, “சஞ்சய் சிங் தாக்கல் செய்துள்ள மனு, மாநிலங்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. மாநிலங்களவைத் தலைவர் அந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிறகே ஆம் ஆத்மி கட்சியால் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஆம் ஆத்மி எம்பிக்கள், பாஜகவுடன் இணைய விடுத்த கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டாலும் அதற்கு எவ்வித சட்ட ரீதியான தாக்கங்களும் இல்லை.

10-வது அட்டவணையின் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி அவையில் ஒரு கட்சியின் பலத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் அவைத் தலைவருக்கும் செயலகத்துக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். எனவே இந்த இணைப்பு 10-வது அட்டவணைப்படி ஒரு சட்ட மீறல். 10வது அட்டவணையின் 4வது பத்தியின் துணைப்பத்தி, இந்த இணைப்பு என்பது அரசியல் கட்சியின் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று கூறுகிறது” என தெரிவித்துள்ளார்.